கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் பெயர் இல்லை: TTV தினகரன்

சர்கார் படத்தை ஜெயலலிதா இருந்தபோது எடுத்திருந்தால் அவர்களை வீரர்களாக கருதலாம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்! 

Last Updated : Nov 8, 2018, 04:54 PM IST
கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் பெயர் இல்லை: TTV தினகரன்  title=

சர்கார் படத்தை ஜெயலலிதா இருந்தபோது எடுத்திருந்தால் அவர்களை வீரர்களாக கருதலாம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்! 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம் தீபாவளியன்று திரைக்கு வந்தது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது இத்திரைப்படம். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் அரசியல் தலைவர்களை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்து பல தரப்பில் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

இதில், விஜயுடன் கீர்த்தி சுரேஷ், ராதாரவி மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கள்ள ஓட்டு எதிர்ப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.  

இப்படத்தில், விஜய்க்கு வில்லியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமாரின் பெயர் கோமளவல்லியாக அமைக்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு சர்சைகள் எழுந்துள்ளன. இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்றும் கூறப்படுகிறது. 

இதனிடையே, கோமளவல்லி என்ற பெயர் ஜெயலலிதாவின் பெயரே அல்ல என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அந்த பெயர் கொண்ட காதாப்பாத்திரத்தில் கூட ஜெயலலிதா நடித்ததே இல்லை என்றும் அவர் செய்தியாலகளிடம் தெரிவித்துள்ளார். சர்கார் படத்தில் ஜெயலலிதா குறித்த தவறான கருத்துகள் இடம் பெற்றிருந்தால் கடும் எதிர்ப்பு தெரிவிப்பேன் என்றும் இப்படம் முழுக்க முழுக்க எடுக்கப்பட்டவை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சர்கார் படத்தை ஜெயலலிதா இருந்தபோது எடுத்திருந்தால் அவர்களை வீரர்களாக கருதலாம் என்றும் சர்கார் படம் எல்லா திரைப்படத்தை போல் தான் முதலீட்டை எட்டும் என்று நீங்களே அதை பேசி பேசி திரைப்படத்தை ஊடவைத்து விடாதீர்கள் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

 

Trending News