ஆளுநர் கிரீன் சிக்னல்; உறுதியான உதயநிதி பதவியேற்பு.. கோட்டையில் தடபுடல் ஏற்பாடு

ஆளுநர் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதால் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது. அதற்கேற்ப முதலமைச்சர் அறைக்கு அருகிலேயே அவருக்கான அறை ஒதுக்கப்பட்டு ஏற்பாடுகள் தயாராகிவருகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 12, 2022, 08:48 PM IST
  • டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சராகும் உதயநிதி
  • அப்பாயிண்ட்மென்ட் கொடுத்த ஆளுநர்
  • கோட்டையில் ஏற்பாடுகள் தடபுடல்
ஆளுநர் கிரீன் சிக்னல்; உறுதியான உதயநிதி பதவியேற்பு.. கோட்டையில் தடபுடல் ஏற்பாடு title=

மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசில் விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்ற தகவல் கடந்த ஒரு வாரமாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, திமுகவின் இளைஞரணிச் செயலாளர் மற்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க இருப்பது தான் ஹாட் டாப்பிக். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. வரும் 14 ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள் அமைச்சரவையில் மாற்றம் செய்யபட்டு, அன்றைய தினம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார்.

மேலும் படிக்க | ’அண்ணன் ஸ்டாலின்’ திட்டத்தை வரவேற்கிறேன் - நெகிழும் தமிழிசை சௌந்தரராஜன்

அதற்கேற்ப கோட்டையிலும் அவருக்கான அறை மும்முரமாக தயார் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் அறைக்கு அருகிலேயே அமைச்சராக பொறுபேற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனையொட்டி, உதயநிதி ஸ்டாலின் அறையை கோட்டை ஊழியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். அமைச்சரவை மாற்றத்துக்கான அப்பாயிண்ட்மென்டையும் ஆளுநர் கொடுத்துவிட்டதால், இரட்டிப்பு மகிழ்ச்சியில் அமைச்சரவை மாற்றத்துக்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்கும் சமயத்தில் ஏற்கனவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறையில் அதிருப்தியாக இருந்த ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோரின் துறைகளும் மாற்றப்பட இருக்கிறதாம். இப்போது, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக இருக்கும் மெய்யநாதனின் பொறுப்பை, விரைவில் உதயநிதி ஸ்டாலின் ஏற்க இருப்பதால் அவருக்கு வேறொரு துறை ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. உதயநிதி அமைச்சராக பொறுபேற்க இருப்பதால் திமுகவினர் உற்சாகத்தில் இருக்கின்றனர். தமிழக அமைச்சரவை மாற்றம் 14 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ராஜ்பவனில் நடைபெறுகிறது.

மேலும் படிக்க | முத்தமிழறிஞர் மகனே இதை செய்யுங்கள்... ஸ்டாலினுக்கு தமிழிசை வேண்டுகோள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News