சென்னை கொடுங்கையூர் சோலையம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தேவி - பாபு தம்பதி. இவர்களது பூர்வீக சொத்து கொடுங்கையூர் 34-வது வட்டத்தில் உள்ள கொய்யாத்தோப்பு பிரதான சாலையில் அமைந்துள்ளது. இதன் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த முப்பத்தி நான்காவது திமுக மாமன்ற உறுப்பினர் சர்மிளா காந்தி மற்றும் அவரது கணவர் கருணாநிதி உள்ளிட்டோர் தேவி - பாபு தம்பதியை தங்களுடைய அலுவலகத்திற்கு வருமாறு நேற்று அழைத்துள்ளனர். அதன்படி தேவியும், அவரது கணவரும் கவுன்சிலர் அலுவலகத்திற்கு சென்றனர். அவர்களிடம், தற்போது கட்டுமான பணி நடைபெற்று வரும் இடம் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானது என்றும், மூன்று அடி தள்ளி கட்டடம் கட்டுவதால் அதனை உடனே நிறுத்த வேண்டும் எனவும் திமுக கவுன்சிலரின் கணவரான கருணாநிதி கூறியுள்ளார்.
இல்லை எனில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் கட்டத்தை இடித்து அகற்றுவேன் என அவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, சம்பந்தப்பட்ட இடம் தங்களது பெற்றோர் வாங்கியது என்றும், அதற்கான முறையான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக தேவியும், அவரது கணவரும் தெரிவித்தனர். மேலும், இந்த ஆவணங்களை வட்டாட்சியரிடம் சமர்ப்பித்து அதற்கான வரைபடத்தையும் பெற்றுள்ளதால் நாங்கள் எந்த முறைகேட்டிலும் ஈடுபட்டவில்லை என அவர்கள் தங்கள் தரப்பு நியாத்தை விளக்கிக்கூறினர்.
மேலும் படிக்க | DMK கவுன்சிலர் செல்வகுமார் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்
மேலும், மாமன்ற உறுப்பினரான சர்மிளா காந்தி இருக்கும்போது நீங்கள் ஏன் என்னிடம் கேள்வி எழுப்புகிறீர்கள் என கருணாநிதியிடம் தேவி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த கருணாநிதியின் ஆதரவாளர்கள் தேவிக்கு மிரட்டல் விடுக்கும் தொணியில் பேசியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கியது இதற்காக தானா? மாமன்ற உறுப்பினர் இருக்கையில் கணவர்... ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்க்கும் திமுக பெண் கவுன்சிலர். பெண்ணுக்கு மிரட்டல் விடுக்கும் உதவியாளர்கள்..@CMOTamilnadu @mkstalin @chennaicorp pic.twitter.com/JAeDatpntN
— Arunachalam (@Arunachalam1231) March 30, 2022
இதனிடையே இந்த நிகழ்வுகளை எல்லாம் தேவியின் கணவரான பாபு தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வரும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தேவி, கவுன்சிலர் மற்றும் அவரது அடியார்கள் தங்களை மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார். எங்களிடம் எதையோ எதிர்ப்பார்த்து தான் கவுன்சிலரின் ஆட்கள் இவ்வாறு செய்வதாகவும் தேவி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | அடுத்தடுத்து திமுகவில் இணையும் அதிமுக கவுன்சிலர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR