ரஜினிகாந்த் என்ன பொறியியல் பட்டதாரியா? ஜெயக்குமார் கேள்வி

ரஜினிகாந்த் என்ன பொறியியல் பட்டதாரியா? பொறியியல் பட்டதாரிகள்தான் சிஸ்டம் சரியில்லை என்பார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.  

Last Updated : Feb 9, 2018, 03:17 PM IST
ரஜினிகாந்த் என்ன பொறியியல் பட்டதாரியா? ஜெயக்குமார் கேள்வி title=

ரஜினிகாந்த் என்ன பொறியியல் பட்டதாரியா? பொறியியல் பட்டதாரிகள்தான் சிஸ்டம் சரியில்லை என்பார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டியுள்ளது என்றார்.

மேலும், கமல் ஹாசனும் நானும் சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு உண்மையில் காலம்தான் பதில் சொல்லும். எங்கள் இருவரின் கொள்கை ஒன்றாக பொருந்துகிறதா என பார்க்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்;- காவிரி விவகாரம் குறித்து ரஜினி வாய் திறக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆன்மீகத்தின் மூலம் மதசார்புள்ள அரசை நிறுவ விரும்புகிறாரா என்பதை ரஜினி விளக்க வேண்டும். ஆன்மிக அரசியலை ரஜினி பேசிவிட்டு போகட்டும், அண்ணாவின் கொள்கைப்படி நாங்கள் செயல்படுவோம்.

தண்ணீர் கொடுக்க மறுக்கும் கர்நாடகா சென்று சிஸ்டத்தை ரஜினி சரிசெய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Trending News