தாம்பரம் அருகே முடிச்சூரில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நண்பனை கொலை செய்த நபர்களின் பகுதிகளுக்கு சென்று கார் பைக் பொருட்களை அடித்து நொறுக்கிய நண்பார்களால் பரபரப்பு. போலீசார் குவிக்கப்பட்டதால் முடிச்சூரில் பதற்றம்.
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது-20). இவர் கஞ்சா வைத்திருந்ததால் அவரை அதே பகுதியை சேர்ந்த சூரியகாந்தி (வயது-20) என்பவர் தாக்கி விட்டு அவரது செல் போனை பறித்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சந்தோஷ் இது குறித்து அவரது தாயிடம் தெரிவித்ததின் பேரில் அவரது தாய் சூரியகாந்தி வீட்டிற்கு சென்று செல்போனை மீட்டு தந்துள்ளார்.
இதனால் இரு தரப்பினர் இடையே முன் விரதம் ஏற்பட்டு சந்தோஷ் அவரது நண்பர்களான விக்கி (எ) விக்னேஷ் (வயது-19) மற்றும் சிலருடன் முடிச்சூர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் சூரியகாந்தியை வெட்டி கொலை செய்வதற்காக கத்தி, அருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சென்று உள்ளனர்.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி விவகாரம் : 59பேர் உயிரிழப்பு.. தேமுதிகவினர் ஆர்பாட்டம்
அப்போது சூரியகாந்தி, குமார், அமோஸ் ஆகியோர் கத்தியை பிடுங்கி அவர்களை திரும்ப வெட்ட முயற்சித்துள்ளனர். இதில் அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் விக்கி (எ) விக்னேஷ் மட்டும் அவர்களிடம் சிக்கி கொண்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கை, தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொலை செய்த அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து பெருங்களத்தூர் பீர்க்கன் காரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீசார் விக்கியின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சூரியகாந்தி, குமார், அமோஸ் ஆகிய மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் தனது நண்பரை வெட்டி கொலை செய்த சம்பவத்தை அறிந்த விக்கி நண்பர்கள் சிலர் கொலை செய்த நபர்களின் பகுதிகளுக்கு சென்று பொருட்கள் கார் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் துணை ஆணையாளர் பவன் குமார் தலைமையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். திடீரென நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த பயத்தில் இருப்பதாக கூறப்பிடுகிறது. மேலும் வீட்டுகளை அடித்து நொறுக்கி விட்டு சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தாம்பரம் பகுகளில் தொடர்ந்த ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் காவல் துறையினர் இவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என் பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ