‘நாளைய இலக்கு’ - ஜீ தமிழ் நியூஸ் நடத்தும் மாபெரும் கல்வி கண்காட்சி!!

ஜீ தமிழ் நியூஸ் சார்பில் +2 முடித்த மாணவர்களுக்காக நாளைய இலக்கு என்ற பெயரில் மாபெரும் கல்விக் கண்காட்சி நடைபெற உள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Jun 25, 2022, 06:33 AM IST
  • ஜீ தமிழ் நியூஸ் நடத்தும் மாபெரும் கல்வி கண்காட்சி
  • ஜூன் 25 காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை
  • சொகுசுக் கப்பலில் பயணிக்க இலவச டிக்கெட்
‘நாளைய இலக்கு’ - ஜீ தமிழ் நியூஸ் நடத்தும் மாபெரும் கல்வி கண்காட்சி!! title=

ஜீ தமிழ் நியூஸ் சார்பில் +2 முடித்த மாணவர்களுக்காக நாளைய இலக்கு என்ற பெயரில் மாபெரும் கல்வி கண்காட்சி இன்று (ஜூன் 25) கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை AMRITA VISHWA VIDYAPEETHAM,AMET UNIVERSITY மற்றும் DOT SCHOOL OF DESIGN உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்துகிறது. 

இந்த கண்காட்சி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையில் நடைபெறும். கண்காட்சிக்கு வருகை தரும் மாணவர்களுக்கு அனுமதி இலவசம். மருத்துவம், பொறியியல், வணிகவியல், நிர்வாகவியல்,வரைகலை, மென்பொருள் கல்வி,டிஜிட்டல் தொழில் நுட்பங்கள்,டிசைனிங்க் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அனுபவமிக்க கல்வியியல் ஆலோசகர்கள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.

முழுமையாக பயன்பெறும் வகையில் தமிழகத்தின் சிறந்த கல்வியாளர்கள், ஆலோசகர்கள் மாணவர்களின் உயர்கல்விக்கான ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். கண்காட்சியில் பங்கேற்க வரும் மாணவர்களின் வசதிக்காக பல்வேறு தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பிரத்யேக மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படியாக கல்வி சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் அனுமதி இலவசம். இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாபொழி சிறப்பு விருந்தினராக வருகை தர உள்ளார். 

+2 முடித்தவர்களா நீங்கள் ?

+2 முடித்ததும் என்ன படிக்கலாம்? எந்த படிப்பிற்கு என்ன வேலை கிடைக்கும்? வேலை வாய்ப்பு அதிகம் கொடுக்கும் படிப்பு எது? எந்த கல்வியை நிறுவனத்தில் பயில்வது சிறப்பு ? புதிய படிகள் ? புது கோணங்கள் ? திறமைகளுக்கு ஏற்ற படிப்புகள் ? போன்ற எண்ணற்ற குழப்பங்களுக்கு இந்த கல்வி கண்காட்சி விடைகொடுக்க காத்திருக்கிறது. மேலும், பலதரப்பட்ட படிப்புகளை கொண்டிருக்கும் கல்லூரியின் வடிவமைப்பு, வசதி, கட்டணம், கல்வி உதவித்தொகை, கட்டணச்சலுகை உள்ளிட்டவைகளுக்கும் கல்வி கண்காட்சியில் விடை கிடைக்கும். 

வேலைவாய்ப்பு

இது தவிர போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் எந்த வகை படிப்புகளில் சேர்வது, பொறியியல் படிப்புகளில் எந்த வகை படிப்புகள் உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும், புத்தகத்தை தாண்டியும் சிகரம் தொட வைக்கும் படிப்புகள் எது? என்பது போன்ற தகவல்களையும் இக்கண்காட்சியில் பெற முடியும்.

முன்னணி கல்வி நிறுவனங்கள்

மேலும், இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ள அனைத்து முன்னணி கல்வி நிறுவனங்களின் கல்வி கட்டணம், பாட முறை, பயிற்றுவிக்கும் முறை, கல்லூரியில் இருக்கும் இதர வசதிகள், விடுதி வசதி, சிறப்பு பேருந்துகள், செய்முறை பயிற்சி கூடங்கள்,விளையாட்டு அரங்கங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் இந்த கண்காட்சியில் பெறலாம். 

மேலும் வெளிநாடுகளில் உள்ள படிப்புகளை பற்றி அறிந்துக்கொள்ளவும், அவற்றில் சேர்வதற்கான வழிநெறிமுறைகள் பற்றியும் தெரிந்துக்கொள்ளவும் ஆலோசனை வழங்கப்படுகிறது. இப்படி கண்காட்சியில் இடம்பெற்றும் சிறப்புகளின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் மாணவர்களுக்கு தேவையான படிப்பை தேர்தேடுக்க மிகவும் பயனுள்ளதாய் அமையும்.
 
முன்பதிவு 

இப்படியாக தனி சிறப்பு படைத்த இப்பிரமாண்ட கல்வி கண்காட்சியில் பங்கேற்க இதுவரை 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், பங்கேற்க விரும்பும் www.ZeeTamilNews.com மாணவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். 
 
இலவச சொகுசு கப்பல் பயணம் 

இந்த கல்வி கண்காட்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களில் இரண்டு பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சொகுசுக் கப்பலில் பயணிக்க இலவச டிக்கெட் வழங்கப்படும். முந்துங்கள்... முன்னேறுங்கள்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News