SUV with 5 doors: 2023 போர்ஸ் கூர்க்கா இப்படித்தான் இருக்கும்: கசிந்த புகைப்படங்கள்

5 கதவுகள் கொண்ட ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்.யூ.வி காரின் புகைப்படங்கள் வெளியாகி பலரின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. மஹிந்திரா தார், மாருதி சுசுகி ஜிம்னிக்கு எதிராக போட்டியிடும் கார் இது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 1, 2022, 08:10 AM IST
  • 5 கதவுகள் கொண்ட ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்.யூ.வி காரின் புகைப்படங்கள் கசிந்தன
  • 5 கதவுகள் கொண்ட எஸ்.யூ.வி காரை மஹிந்திராவும் வெளியிடுகிறது
  • மாருதியின் சுசுகி ஜிம்னிக்கு எதிராக போட்டியிடும் கார்கள்
SUV with 5 doors: 2023 போர்ஸ் கூர்க்கா இப்படித்தான் இருக்கும்: கசிந்த புகைப்படங்கள் title=

புதுடெல்லி: 2023 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-கிளாஸ் ஸ்பாட் எஸ்யூவி காரைப் போன்று பலரின் கவனத்தையும் ஈர்க்க களம் இறங்கவுள்ளது ஃபோர்ஸ் கூர்க்காவின் புதிய தயாரிப்பு. மஹிந்திரா தார், மாருதி சுசுகி ஜிம்னிக்கு எதிராக போட்டியிடும் காரின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின்றன.

ஃபோர்ஸ் சில காலமாக ஐந்து கதவுகள் கொண்ட கூர்க்கா எஸ்யூவி காரை தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. வரவிருக்கும் எஸ்யூவியின் புதிய காட்சிகள் புதிய விவரங்களை வெளிப்படுத்தியுள்ளன.

5 கதவுகள் கொண்ட கூர்க்கா, மஹிந்திரா தார் 5-டோர் மற்றும் மாருதி சுசுகி 5-டோர் ஜிம்னியுடன் போட்டியிடும். 5 கதவுகள் கொண்ட ஜிம்னி 7 இருக்கைகளாகவும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

 ஃபோர்ஸ் கூர்காவின் 5-கதவு பதிப்பானது, ஃபோர்ஸ் கூர்க்காவிற்கு சமமான 3-கதவு பதிப்பை விட குறைந்தது ரூ.1 லட்சம் அதிகமாக விலை இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.

ஐந்து கதவுகள் கொண்ட கூர்க்கா வழக்கமான கூர்காவின் சி இன் சி லேடர்-ஃபிரேம் கட்டமைப்பின் நீட்டிக்கப்பட்ட பதிப்பை அடிப்படையாகக் கொண்டது 

Force Gurkha எஸ்யூவியில் Apple CarPlay மற்றும் Android Auto உடன் 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5-கதவு ஃபோர்ஸ் கூர்க்கா 3-கதவு மாடலின் அதே செட்-அப் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் கலவையைப் பகிர்ந்து கொள்ளுஇருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூட்டின் கீழ், இரண்டாம் தலைமுறை ஃபோர்ஸ் கூர்க்கா BS6-இணக்கமான 2.6-லிட்டர் டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது இப்போது 91bhp மற்றும் 250Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. ஐந்து ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4×4 சிஸ்டம் தரநிலையாக வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | 2022ம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்பக் கார்கள்

கூர்க்கா ஒரு தனித்துவமான செயல்பாட்டு ஸ்நோர்கெலைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இது 700 மிமீ தண்ணீரிலும் இயங்கும். இந்த காரின் பின்புறத்தில் புதிய டெயில்லைட்கள் மற்றும் காரில் மேல் பகுதியில் உள்ள லக்கேஜ் கேரியரை எளிதாக அணுகுவதற்கான ஏணிகள் பொருத்தப்பட்டுள்ளன.

2021 ஃபோர்ஸ் கூர்காவில் வட்டவடிவ DRLகள் கொண்ட LED ஹெட்லேம்ப்கள், முன் ஃபெண்டர் பொருத்தப்பட்ட டர்ன் இண்டிகேட்டர்கள், 16-இன்ச் ஸ்டீல் வீல்கள், கருப்பு முன் மற்றும் பின்புற பம்ப்பர்கள், கருப்பு ORVMகள், ஒரு இழுவை ஹூக் மற்றும் பல உள்ளன.

இதனிடையில்,மஹிந்திரா ஸ்கார்பியோ 2022 விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இந்திய கார் தயாரிப்பாளர்கள் ஏராளமான டீஸர்களை வெளியிட்டு அனைவரின் ஆவலையும் தூண்டுகின்றனர்.

மஹிந்திரா XUV700  கார் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்புடன் வரும். ஸ்கார்பியோ புதிய அம்சங்களுடன் வரும். புதிய ஸ்கார்பியோ டி-பிரிவு காரின் விலை, ரூ 10 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | காற்றை விலைபேச வரும் ஹூண்டாய் MPV 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News