- வாட்ஸ் அப் க்ரூப்பில் உள்ள நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2017-ல் ஒரு குழுவின் 256 பேர் மட்டுமே இருக்க வரம்பு இருந்தது, பின்னர் கடந்த மே மாதத்தில் எண்ணிக்கை 512 ஆக உயர்ந்த நிலையில், தற்போது வாட்ஸ் அப் குழுவில் 1,024 நபர்கள் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மெட்டா வாட்ஸ் அப்பை பணமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது, அதனால் பீட்டா வெர்ஷனின் பிசினஸ் செயலியை பயன்படுத்துபவர்களுக்கு வாட்ஸ் அப் பிரீமியம் சப்ஸ்க்ரிப்ஷனை வழங்க அனுமதிக்கிறது.
மேலும் படிக்க | ரெட்மி நோட் 12 சீரிஸ் ரிலீஸ் எப்போது?... வெளியான அப்டேட்
- ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் அனுப்பப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இனி ஸ்க்ரீஷாட் எடுக்கவோ அல்லது வீடியோக்களை ஸ்க்ரீன் ரெக்கார்டிங் செய்யவோ முடியாது. தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் இந்த அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
- ஐபேட் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் வாட்ஸ் அப்பை அணுக முடியும், இப்போது இந்த அம்சம் பிசி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-க்கு கிடைக்கிறது, முதலில் இந்த பயன்பாடு பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெற போகிறது.
- முன்னரெல்லாம் நம்முடைய லாஸ்ட் சீன்-ஐ யார் பார்க்க வேண்டுமோ அதன்படி செய்துகொள்ளும் வசதி மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது நாம் ஆன்லைனில் இருப்பதை யாரெல்லாம் பார்க்கலாம் பார்க்கக்கூடாது என்று மறைத்துக்கொள்ளும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.
- மேலும் இப்போது வாட்ஸ் அப்பில் நீங்கள் ஒருவருக்கு தவறாக செய்தி அனுப்பிவிட்டால் அதனை 165 நிமிடங்களுக்குள் எடிட் செய்துவிட்டு அவருக்கு அந்த மெசேஜை அனுப்பிக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | கூகுளில் தேடக்கூடாத ‘சில’ விஷயங்கள்... மாட்டினால் கம்பி எண்ண வேண்டியது தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ