தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், இரு மாதங்களுக்கு முன்பாக மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில், அதிருப்தி வாடிக்கையாளர்கள் பலர் மலிவான திட்டங்கள் கொடுக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறத் தொடங்கினர். அரசு பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் BSNL தனது 4G நெட்வொர்க்கை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பல வகையான மலிவான திட்டஙக்ளையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் BSNL தனது கோடிக்கணக்கான பயனர்களுக்கு தீபாவளி பரிசை வழங்கியுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 24வது ஆண்டு விழாவை இந்த ஆண்டு கொண்டாடியுள்ள நிலையில், மைல்கல்லை நினைவுகூரும் வகையில், நிறுவனம் 24ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது. 24 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், BSNL அதன் பல திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு 24GB இலவச டேட்டாவை வழங்குகிறது. இந்த இலவசத் தரவை நீங்கள் எவ்வாறு பெறலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் BSNL சிம்மைப் பயன்படுத்தி, 24 ஜிபி இலவச டேட்டாவின் பலனைப் பெற விரும்பினால், இதற்காக நீங்கள் ரூ. 500க்கு மேல் கட்டணம் ஒரு திட்டத்தை வாங்க வேண்டும். இதனுடன், இந்த சலுகையை பெற நீங்கள் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 24 வரை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.500-க்கு மேலான கட்டணம் கொண்ட சில ரீசார்ஜ் திட்டங்கள்
பிஎஸ்என்எல்லின் ரூ.599 திட்டம்
BSNL இன் ரூ.599 திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்கள் நீண்ட வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதில் தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கு வரம்பற்ற இலவச அழைப்பு மேற்கொள்ளும் வசதியும் உண்டு. தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும். இந்த திட்டம் Binge All Night சலுகையுடன் வருகிறது, எனவே நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற டேட்டாவைப் பயன்படுத்தலாம். இப்போது நிறுவனம் இந்த திட்டத்தில் 24 ஜிபி இலவச டேட்டாவையும் சேர்த்துள்ளது.
BSNL இன் ரூ.1999 திட்டம்
BSNL இன் இந்த ரீசார்ஜ் திட்டம் குறிப்பாக அதிக இணைய தரவு தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாகும். இதில் உங்களுக்கு மொத்தம் 600ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. BSNL இன் இந்தத் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இதில் எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற இலவச அழைப்பு வசதி கிடைக்கும். இதிலும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதி கிடைக்கும். அக்டோபர் 24க்கு முன் இந்த திட்டத்தை வாங்கினால், பேக்கில் 24ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும்.
BSNL இன் ரூ.2999 திட்டம்
BSNL 2999 திட்டமும் ஒரு வருட வேலிடிட்டி கொண்ட திட்டம். இதில் எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற இலவச அழைப்பு வசதி கிடைக்கும். டேட்டாவைப் பற்றி பேசினால், திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும்.
பிஎஸ்என்எல் 5ஜி சேவை
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) கடந்த சில மாதங்களாக தனது நெர்ட்வொர்க்கை வலுப்படுத்தி வருகிறது. 2025 ஜனவரியில் 5G சேவையை 2025 ஜனவரி மாதத்தில் தொடங்க திட்டமிட்டு வருகிறது. வாடிக்கையாளர்களை ஈர்க்க மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்துதல் முதல் 4G டவர்களை நிறுவது வரை, அரசு டெலிகாம் நிறுவனம் இப்போது தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட மிக வேகமாக தயாராகி வருகிறது. அதே சமயத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவையை 5ஜியாக மேம்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. இதனால் 5ஜி சேவையை தொடங்க அதிக முதலீடு தேவைப்படாது.
மேலும் படிக்க | ரிலையன்ஸ் ஜியோ.... நாளொன்றுக்கு 10 ரூபாயில் தினம் 2 GB டேட்டா... பயனர்கள் ஹாப்பி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ