Hero HF Deluxe Bike: சமீப காலமாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பைக் அதிகம் விரும்பப்பட்டு வருகிறது, இதற்குக் காரணம், இந்த பைக்கின் விலை மற்றும் தோற்றம், வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் மைலேஜ் ஆகிய அனைத்தும் சிறப்பாக, கவரக்கூடிய வகையில் இருப்பதுதான். ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் வழங்கும் பல 100சிசி (Hero 100cc Motorcycle) இன்ஜின் பைக்குகள் வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாகிவிட்டன. அவற்றில் ஹீரோ எச்எப் டீலக் (Hero HF Deluxe) பைக் தனிச்சிறப்பு. குறிப்பாக நகரங்கள் மற்றும் கிராமங்களில் இந்த பைக் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.
பைக் வாங்க சிறப்பு சலுகை
பல நிறுவனங்களின் பைக்குகள் Hero MotoCorp இன் பைக்கின் முன் போட்டியிட முடியவில்லை. இதன் காரணமாக ஹீரோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை தொடர்ந்து இயக்கி வருகிறது. இந்த சலுகைகள் மூலம் அதிக விலையில் விற்பனையாகும் பைக்கை வெறும் ஆயிரங்களில் வாங்க வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை (Bike Offers) நிறுவனம் வழங்குகிறது. அதுக்குறித்து பார்ப்போம்.
மேலும் படிக்க: இந்த சோலார் ஜெனரேட்டர் உடனே வாங்குங்க, எலக்ட்ரிசிட்டி பில் வராது
புதிய ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் டீலக்ஸ் விலை (டெல்லி)
புதிய Hero HF டீலக்ஸ் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.64,438 ஆகும். அதன் ஆன்ரோடு விலை சுமார் ரூ.78,252 ஆகும். நீங்கள் இந்த பைக்கை வாங்க வேண்டும் என நினைகிறீர்கள், ஆனால், உங்களிடம் அவ்வளவு பணம் இல்லை. கவலைப்பட வேண்டாம், குறைந்த பட்ஜெட்டில் இந்த பைக் எப்படி வாங்குவது என்பதைப் பற்றிய தகவல்களை இங்கே நாங்கள் வழங்குகிறோம். அதாவது ₹ 5000 முன்பணம் செலுத்தி EMI மூலம் எளிதாக இந்த பைக்கின் உரிமையாளராக நீங்கள் மாறமுடியும்.
பைக் ஃபைனான்ஸ் செய்யும் பல நிறுவனங்கள்
அதேநேரத்தில் நீங்கள் வாகனம் வாங்க வேண்டும் என்று நினைத்தால், வாடிக்கையாளர்களுக்கு நிதித் திட்டத்தை வழங்கும் இதுபோன்ற பல நிறுவனங்கள் சந்தையில் உள்ளன என்பதை நினைவில் கொள்க. எனவே இங்குள்ள ஒரு சிறப்பு நிதித் திட்டத்தில் ₹ 5000 முன்பணம் செலுத்தி பைக்கை வீட்டிற்கு கொண்டு வரலாம்.
ஃபைனான்ஸ் மூலம் புதிய ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் எப்படி வாங்குவது?
டான்சு நிதித் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் புதிய Hero HF டீலக்ஸ் பைக்கை வீட்டிற்கு கொண்டு வரலாம். ஆன்லைன் ஃபைனான்ஸ் கால்குலேட்டரின் படி, நீங்கள் ரூ.67,252க்கு வங்கியில் பைக் கடன் (Bike Loan) வாங்க வேண்டும். வங்கியில் பைக் கடனைப் பெறும்போது, வங்கிக்கு 9.7% வட்டியை செலுத்த வேண்டும். இங்கே இந்தக் கடனின் காலம் முழுவதுமாக 3 ஆண்டுகள் இருக்கும். மேலும் இந்தக் கடனின்படி ஒவ்வொரு மாதமும் ரூ. 2,161 மாதாந்திர தவனை EMI செலுத்த வேண்டும். இருப்பினும், உங்கள் வசதிக்கு ஏற்ப கடன் காலத்தை குறைக்கலாம் மற்றும் அதிகரித்துக்கொள்ளலாம்
ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் மைலேஜ் மன்னன்
ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் மைலேஜ் மன்னன் என அழைக்கப்படுவது உண்டு. இந்த பைக் 70 கிமீ மைலேஜ் தருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எஞ்சின் பற்றி பேசுகையில், எச்எஃப் டீலக்ஸ் பிஎஸ் 6, 100 சிசி, ஐ3எஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது எரிபொருள் இஞ்செக்சன் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 7.94 பிஎச்பி பவரையும், 8.05 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. ஹீரோவின் எச்எஃப் டீலக்ஸ் அதன் 100சிசி பைக் பிரிவில் மிகவும் விரும்பப்படுகிறது.
மேலும் படிக்க: WhatsApp! ரீசார்ஜ் செய்யாமல் அன்லிமிடெட் காலிங் செய்ய முடியும்.. வருகிறது புதிய வசதி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ