ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்கள், சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர், தங்கள் மொபைல் கட்டணங்களை சராசரியாக 15 சதவீதம் வரை உயர்த்தியதன் விளைவாக, பல மொபைல் சந்தாதாரர்கள் அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனத்திற்கு மாறத் தொடங்கியுள்ளனர். மலிவான கட்டணத்தில் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் BSNL நிறுவனத்தின் வாடிக்கையாளகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது என தரவுகள் கூறுகின்றன.
பிஎஸ்என்எல் 4G நெட்வொர்க்
தொலைத் தொடர்புத்துறையில் தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம், கடும் போட்டியை கொடுக்கும் விதிமாக தனது 4G நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவைக்கான பரிசோதனைகளையும் தொடங்கியுள்ளது . இதன் மூலம் இணைய வேகம் அதிகரிக்கும் என்பதோடு, கட்டணங்களும் குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பல நகரங்களில் BSNL 4G சேவை
எனினும், பிஎஸ்என்எல் நிறுவன சிம் பயன்படுத்துபவர்கள் பல இடங்களில் நெட்வொர்க் பிரச்சனையை சந்திக்கின்றனர். BSNL பல நகரங்களில் 4G சேவையை தொடங்கியுள்ளது என்றாலும் பல இடங்களில் நெட்வொர்க் பிரச்சனைகள் உள்ளன. இணையம் இல்லாமல் வாழ்க்கை முடங்கி விடும் என்ற நிலைக்கு இன்று வந்துவிட்டோம். அன்றாட வாழ்க்கை தொடர்பான அனைத்து வேலைகளும் இணையம் மூலமாகவே செய்யப்படுவதால், இணைய வேகம் சிறப்பாக இருந்தால், தடையின்றி வேலை செய்ய இயலும் என்பதை மறுக்க இயலாது.
நெட்வொர்க் பிரச்சனை ஏற்படுவதற்கான காரணம்
BSNL க்கு அரசாங்கம் வழங்கிய ஸ்பெக்ட்ரம் பலவீனமாக இருப்பதால் BSNL வழங்கும் 4G நெட்வொர்க் சரியாக வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 700 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 2100 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளை அரசாங்கம் வழங்கியுள்ளது. 2100 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் மூலம் கிடைக்கும் நெட்வொர்க் மிகவும் நன்றாக இல்லை என கூறப்படுகிறது. 700 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் பெரும்பாலும் 5ஜிக்கு பயன்படுத்தப்படுகிறது என்றாலும், பிஎஸ்என்எல் 4ஜிக்கும் இதனை பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | 91 ரூபாயில் என்னவெல்லாம் கிடைக்கும்? ஜியோ ரிலையன்ஸ் வழங்கும் சூப்பர் திட்டம்!
இணைய வேகத்தை அதிகரிக்க சில டிப்ஸ்
பிஎஸ்என்எல்லின் 4ஜி நெட்வொர்க்கின் வேகத்தை அதிகரிக்க, உங்கள் 5ஜி போனில் பிஎஸ்என்எல் சிம் கார்டைச் செருக வேண்டும். 5G ஃபோன்கள் 700 MHz அலைவரிசையைப் பயன்படுத்துகின்றன. இது 4G ஐ விட சிறந்தது. எனவே, இதன் மூலம் உங்கள் நெட்வொர்க்கின் வேகத்தை அதிகரிக்கலாம்.
செட்டிங்ஸில் செய்ய வேண்டிய மாற்றங்கள்
உங்கள் தொலைபேசியின் செட்டிங் அமைப்புகளை சிறிது மாற்றுவதன் மூலம் 4G நெட்வொர்க்கின் வேகத்தை அதிகரிக்கலாம். உங்கள் தொலைபேசியின் அமைப்புகளுக்குச் சென்று "நெட்வொர்க் மற்றும் இணையம்" என்பதைக் கிளிக் செய்து "சிம் கார்டு" என்பதற்குச் சென்று பிஎஸ்என்எல் சிம்மைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, "5G / 4G / LTE" பயன்முறையைத் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் போனின் நெட்வொர்க் வேகத்தை அதிகரிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ