Tips and Tricks: நெட்ஃபிளிக்ஸ் சந்தாவை எளிதாக ரத்து செய்யும் சுலப வழிமுறைகள்

பில்லிங் காலத்திற்கு முன்னரே நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை ரத்து செய்தால், பில்லிங் காலம் முடியும் வரை Netflixஐப் பயன்படுத்தலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 22, 2022, 06:58 AM IST
  • நெட்பிளிக்ஸ் சந்தா ரத்து செய்யும் முறை
  • பில்லிங் காலத்தில் ரத்து செய்தால் நஷ்டமா?
  • நெட்பிளிக்ஸ் டிட் பிட்ஸ்
Tips and Tricks: நெட்ஃபிளிக்ஸ் சந்தாவை எளிதாக ரத்து செய்யும் சுலப வழிமுறைகள் title=

Netflix இந்தியாவின் சிறந்த ஸ்ட்ரீமிங் சேவைகளில் ஒன்று. இந்த வகை பொழுதுபோக்கு, கொஞ்சம் விலையுயர்ந்ததுதான்.ஸ்ட்ரீமிங் சேவைகளில் சேமிக்க விரும்புபவர்களும் அதிகம். 

உங்கள் பணத்தையும் சேமிக்க திட்டமிட்டிருந்தால், இப்போது உங்கள் Netflix சந்தாவை எப்படி ரத்து செய்யலாம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

உங்கள் நெட்ஃபிக்ஸ் சந்தாவை எப்படி ரத்து செய்வது
உங்கள் ஸ்மார்ட்போனில் Netflix செயலியைத் திறந்து, மேல் வலது மூலையில் உள்ள சுயவிவர ஐகானைத் தட்டவும்.
"கணக்கு" (Account) பகுதிக்குச் செல்லவும்
கீழே ஸ்க்ரோல் செய்து, "உறுப்பினர்களை ரத்து செய்" விருப்பத்தைத் கிளிக் செய்யவும். "திட்டத்தை ரத்து செய்" பக்கத்திற்கு நீங்கள் திருப்பி விடப்படுவீர்கள்.
"பினிஷ் கேன்சல்லேஷன்" (Finish Cancellation) விருப்பத்தைத் கிளிக் செய்யவும்

மேலும் படிக்க | Jio - Vi - Airtel: ₹299 பிரீபெய்ட் திட்டத்தில் சிறந்தது எது?

பில்லிங் காலத்தில் மீதமுள்ள நேரத்தில் சந்தாவை ரத்து செய்தால், பில்லிங் காலம் முடியும் வரை நெட்ஃபிக்ஸ் பயன்படுத்தலாம்.

திட்டத்தின் புதுப்பித்தல் தேதியைச் சரிபார்க்க, மேலே குறிப்பிட்டுள்ள படிகளைப் பின்பற்றி, "பில்லிங் விவரங்கள்" விருப்பத்தைதை கிளிக் செய்வதன் மூலம் "கணக்குகள்" பகுதியைப் பபருங்கள்.
"அடுத்த பில்லிங் தேதி", "திட்டம்" மற்றும் பிற பில்லிங் விவரங்கள் அங்கு இருக்கும்.  

சிறிது நேரத்திற்குப் பிறகு நீங்கள் Netflix இல் மீண்டும் சேரத் திட்டமிட்டால், நீங்கள் சந்தாவை ரத்து செய்வதற்கு முன் கடந்த 10 மாதங்களாக உங்கள் பார்வை செயல்பாட்டைப் பார்ப்பீர்கள். Netflix இன் படி, 10 மாதங்களுக்கு கிடைக்கக்கூடிய சேவைகள்:  

உங்கள் பரிந்துரைகள் (Your recommendations)

மதிப்பீடுகள்

கணக்கு விவரங்கள்

விளையாட்டு வரலாறு

கேம் சேமிப்பு (Game saves), இது உங்கள் சாதனத்திலிருந்து கேம் மற்றும் கேம் தரவு நீக்கப்படாத வரை மட்டுமே கிடைக்கும்)

மேலும் படிக்க | ரூ.16,000 மதிப்பிலான Realme ஸ்மார்ட்போனை ரூ.549க்கு வாங்குவது எப்படி?

 ஒரே வீட்டில் வசிக்காத நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே கடவுச்சொல் பகிர்வு நடைமுறையை மாற்றி, அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வழியை Netflix பரிசோதித்து வருகிறது. 

'கூடுதல் உறுப்பினரைச் சேர்' மற்றும் 'புதிய கணக்கிற்கு சுயவிவரத்தை மாற்றுதல்' என்ற இரண்டு அம்சங்களை ஸ்ட்ரீமிங் இயங்குதளம் பரிசோதித்து வருகிறது. 

சிலி, கோஸ்டாரிகா மற்றும் பெரு என சில நாடுகளில் இந்த அம்சங்களை சோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் இந்த நாடுகளில் உள்ள தனது பயனர்களுக்கு அவை கிடைக்கும் என்றும் நெட்ஃபிக்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கு..தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News