ஐபோன் X வாங்க இப்படி ஒரு அலப்பறையா?

Last Updated : Nov 4, 2017, 12:29 PM IST
ஐபோன் X வாங்க இப்படி ஒரு அலப்பறையா? title=

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X ஸ்மார்ட்போனின் விற்பனை நேற்று துவங்கியது. இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஐபோன் X விற்பனை துவங்கியுள்ளது. 

அந்த வகையில் மும்பையை சேர்ந்த ஆப்பிள் பிரியர் ஒருவர் தான் விரும்பும் ஐபோன் X வாங்க குதிரை சவாரி, மேள தாளத்துடன் சென்றுள்ளார். கடையினுள் செல்லாமல், குதிரையில் அமரந்த படியே அவருக்கு புத்தம் புதிய ஐபோன் X விநியோகம் செய்யப்பட்டது.  

இந்தியாவிலும் ஏர்டெல் தளத்தில் விற்பனை செய்யப்பட்ட ஐபோன் X சில நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளது.

 

 

 

Trending News