தேசிய மருத்துவக் காப்பீடு திட்ட பயனாளிகள் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள ஏதுவாக ப்ரத்தியேக இணையதளம் மற்றும் ஹெல்ப் லைன் வசதியினை NHA துவங்கியுள்ளது!
பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (PMJAY) என்ற தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்தை வரும் 23-ம் தேதி சத்தீஸ்கரில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைக்கின்றார்.
இந்த PMJAY திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பிலான காப்பீட்டு திட்டம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலன் சுமார் 10 கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெருவர் என அரசு தரப்பில் தெரிவிகப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்திட்டத்திற்காக mera.pmjay.gov.in என்ற இணைய தளத்தையும் 14555 என்ற எண்ணில் ஹெல்ப் லைன் வசதியையும் நேஷனல் ஹெல்த் ஏஜென்சி (NHA) துவங்கியுள்ளது.
இந்த பிரத்தியேக வலைதளத்தின் உதவி கொண்டு ஒருவர் தங்களது மொபைல் எண்ணை கொண்டு தங்களது காப்பீட்டு திட்ட நிலைப்பாடினை தெரிந்துக்கொள்ளலாம் எனவும், சான்றிதழ் சமர்பிக்கு, மனிதவள குறுக்கீடு போன்ற பிரச்சனைகள் ஏதும் இன்றி பயனர்கள் தங்களது சலுகைகளை நேரடியாக பெற வழிவகுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தங்களது மொபைல் எண்ணை கொண்டு தங்களுக்கு காப்பீடு கிடைக்குமா இல்லையா என்பதையும் அறிந்துக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ள மத்திய அரசு, விரைவில் பயனர்களுக்கு இத்திட்டம் குறித்து உதவும் வகையில் பயனாளிகள் மற்றும் மருத்துவமனையுடன் ஒருங்கிணைந்து 'ஆயுஷ்மன் மித்ராஸ்' மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளது.