Netflix Password ஷேர் செய்யறீங்களா? இனி அப்படி செய்தால் தனி கட்டணம்!

Netflix Password Sharing: நெட்ஃப்ளிக்ஸில் பாஸ்வேர்டை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறீர்களா? உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. இப்படி செய்தால் இனி தனியாக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 19, 2022, 04:54 PM IST
  • நெட்ஃப்ளிக்ஸ் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி.
  • கடவுச்சொல்லைப் பகிர புதிய ஆப்ஷன் வருகிறது.
  • இதற்கு தனியாக கட்டணத்தையும் செலுத்த வேண்டி இருக்கும்.
Netflix Password ஷேர் செய்யறீங்களா? இனி அப்படி செய்தால் தனி கட்டணம்! title=

நெட்ஃப்ளிக்ஸ் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி!! இப்போது ஓடிடி இயங்குதளமான நெட்ஃப்ளிக்ஸ் கடவுச்சொல் பகிர்வுக்கு தொகையை வசூலிக்கத் தொடங்கியுள்ளது. நெட்ஃபிக்ஸ் கடவுச்சொல் பகிர்வு செயல்முறையை விரைவில் தடைசெய்யும். அல்லது பயனர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் நெட்ஃபிக்ஸ் கணக்கைப் பகிர்வதற்கு பணம் செலுத்த வேண்டிய ஒரு வழிமுறையை நிறுவனம் வெளியிடும் என்று நீண்ட காலமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நெட்ஃப்ளிக்ஸ் இந்த செயல்முறையை சோதிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது நெட்ஃப்ளிக்ஸ் கடவுச்சொல் பகிர்வுக்கு மிக விரைவில் ஒரு தொகையை அளிக்க வேண்டி இருக்கும். 

கடவுச்சொல்லைப் பகிர புதிய ஆப்ஷன் வருகிறது

நெட்ஃப்ளிக்ஸ் ஒரு புதிய அம்சத்தை சோதிக்கத் தொடங்கியுள்ளது. இதன் கீழ் தங்கள் கடவுச்சொற்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பயனர்களிடமிருந்து கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறது. நெட்ஃப்ளிக்ஸ்-ல் 'ஏட் எ ஹோம் ஆப்ஷன் நெட்ஃப்ளிக்ஸ்' என்ற புதிய விருப்பம் சேர்க்கப்படுகிறது. இதை வேறொருவரின் நெட்ஃப்ளிக்ஸ் கணக்கின் கடவுச்சொல்லைப் பயன்படுத்துபவர்கள் பயன்படுத்த வேண்டும். மற்றவர்களின் கடவுச்சொல்லை பயன்படுத்துபவர்கள் இந்த விருப்பத்தைப் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்பதோடு இதற்கு தனியாக கட்டணத்தையும் செலுத்த வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | இன்ஸ்டாகிராம் சாட்டிங்கிலேயே ஷாப்பிங் செய்யலாம்: இது கட்டண அம்சம் 

நெட்ஃபிக்ஸ் பயனர்களிடமிருந்து பணம் வசூலிக்கும்

கடவுச்சொல்லைப் பகிரும் பயனர்கள் அதற்குத் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த அம்சம் சேர்க்கப்படும் நாடுகளில், கடவுச்சொல்லைப் பகிர, 'ஏட் எ ஹோம்’ விருப்பத்தைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் $2.99 ​​(தோராயமாக ரூ. 250) செலுத்த வேண்டும். இந்தியாவில் உள்ள பயனர்களிடமிருந்து கடவுச்சொல் பகிர்வுக்கு எவ்வளவு பணம் வசூலிக்கப்படும் என்பதை தற்சமயம் நெட்ஃப்ளிக்ஸ் தெரிவிக்கவில்லை. 

இந்த நாடுகளில் புதிய அம்சம் வெளியிடப்படுகிறது

தற்போது இந்த 'ஏட் எ ஹோம்' அம்சம் அனைத்து நாடுகளிலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் சிலி, கோஸ்டாரிகா மற்றும் பெருவில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அம்சம் அர்ஜென்டினா, டொமினிகன் குடியரசு, எல் சால்வடார், குவாத்தமாலா மற்றும் ஹவுண்டுராஸ் போன்ற நாடுகளில் அடுத்த மாதம் வெளியிடப்படும். படிப்படியாக, இந்த அம்சம் அனைத்து நாடுகளிலும் உள்ள பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

மேலும் படிக்க | ஏர்டெல் கொடுக்கும் இலவச அமேசான் பிரைம் ஆஃபர் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News