Realme-யின் தீபாவளி பரிசு: அட்டகாசமான Washing Machine-ஐ அறிமுகம் செய்யவுள்ளது நிறுவனம்

அனைத்து வகையான பொருட்களையும் உற்பத்தி செய்து சந்தைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே ரியல்மி நிறுவனத்தின் நோக்கமாகும். ஹேர் ட்ரையர் மற்றும் ரோபோ வாக்யூம் கிளீனர் போன்ற தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய பிறகு, இப்போது ரியல்மீயின் அடுத்த இலக்கு சலவை இயந்திரம் ஆகும்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 23, 2021, 04:14 PM IST
Realme-யின் தீபாவளி பரிசு: அட்டகாசமான Washing Machine-ஐ அறிமுகம் செய்யவுள்ளது நிறுவனம்  title=

இந்தியாவில் தொலைபேசி விற்பனையில் சக்கைபோடு போடும் சீன தொலைபேசி உற்பத்தியாளரான ரியல்மி, அதன் தயாரிப்புகள் மூலம் மிகவும் பிரபலமாகி வருகிறது.

நிறுவனம் ஏற்கனவெ ஸ்மார்ட்போன்களுக்கான சந்தையில் மிகவும் பிரசித்தியாக உள்ளது. ஆனால் இப்போது இந்த நிறுவனம், ஒரு புதிய உலகத்திற்குள் நுழையப் போகிறது. இப்போது ரியல்மி தனது நிறுவனத்தின் டெக்லைஃப் பிராண்டின் கீழ் சலவை இயந்திரத்தை (Washing Machine) அறிமுகப்படுத்தப் போகிறது. இந்த சலவை இயந்திரம் எப்போது வரும், அதில் என்ன சிறப்பம்சங்கள் இருக்ககூடும் என்பதைப் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை

இந்த செய்தியை உறுதிசெய்த ரியல்மி (Realme) இந்தியா மற்றும் ஐரோப்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷேத், நிறுவனம் தனது ரியல்மி டெக்லைஃப் பிராண்டின் கீழ் சலவை இயந்திரங்கள் மற்றும் இன்னும் பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளார். நிறுவனம் இதுபோன்ற ஒரு தயாரிப்பை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். இந்த தீபாவளிக்குள் ரியல்மியின் சலவை இயந்திரம் அறிமுகம் செய்யப்படும் என்று அவர் கூறுகிறார்.

ALSO READ: Realme போன்களின் அட்டகாச அறிமுகம்: கசிந்த தகவல்கள் இதோ

அனைத்து வகையான பொருட்களையும் உற்பத்தி செய்து சந்தைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே ரியல்மி நிறுவனத்தின் நோக்கமாகும். ஹேர் ட்ரையர் மற்றும் ரோபோ வாக்யூம் கிளீனர் போன்ற தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய பிறகு, இப்போது ரியல்மீயின் அடுத்த இலக்கு சலவை இயந்திரம் (Washing Machine) ஆகும்.

சலவை இயந்திரம் எப்படி இருக்கும்

இந்த சலவை இயந்திரத்தின் அம்சங்கள் அல்லது அதைப் பற்றிய வேறு எந்த தகவலும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. எனினும், மாதவ் ஷேத் ஒரு நிகழ்ச்சியில் இது பற்றி குறிப்பிட்ட ​சில விஷயங்களின் அடிப்படையில் சிலவற்றை கண்டிப்பாக ஊகிக்க முடிகிறது.

இந்த வாஷிங் மெஷினில் முன்பக்கமாக ஆடைகள் போடப்படும், அதாவது, இது, ஃபிரண்ட் லோட் வாஷிங் மெஷினாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ரியல்மியின் பழைய பொருட்களின் விலைகளின் அடிப்படையில், இந்த இயந்திரமும் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்காது என்று கூறலாம்.

மேலும் ஒரு விஷயம் ஊகிக்கப்படுகிறது. அதாவது, ரியல்மியின் மற்ற தயாரிப்புகளைப் போலவே, இந்த வாஷிங் மெஷினையும் வாடிக்கையாளர் தனது ஸ்மார்ட்போனிலிருந்து ரியல்மே லிங்க் செயலி மூலம் கட்டுப்படுத்த முடியும். இந்த வாஷிங் மெஷினில் வேறு என்ன சிறப்பம்சம் இருக்கும் என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

ரியல்மியின் டெக்லைஃப் பிராண்ட்டிடம் டிஜோ பிராண்ட் இருந்தாலும், ரியல்மி இன்னும் தனது சொந்த நிறுவனத்தின் பெயரில்தான் தயாரிப்புகளை உருவாக்க விரும்புகிறது. எனவே, இந்த சலவை இயந்திரத்தில் எந்த பிராண்ட்டின் பெயர் இருக்கும் என்று தற்போது கூற முடியாது.

ALSO READ: Realme அசத்தும் பட்ஜெட் போன் அறிமுகம்: விலை, பிற விவரங்கள் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News