ஸ்மார்ட்போன்களை ஸ்மார்ட் ஆக்குவது அவற்றில் இருக்கும் ஆப்ஸ் தான். நமக்கு தேவையான பணிகளை அந்த செயலிகளை ஸ்மார்டாக செய்து கொடுத்துவிடும். அந்தவகையில் புதிய போன் வாங்கிய பிறகு, பயனர்கள் முதலில் இன்ஸ்டால் செய்வது தங்களுக்குப் பிடித்த ஆப்ஸ்தான். அப்படிப்பட்ட சூழ்நிலையில், முக்கியமான ஆப்ஸ் தவறுதலாக டெலிட் ஆகிவிட்டால் கவலை ஏற்படுவது இயல்புதான். நல்ல விஷயம் என்னவென்றால், நீக்கப்பட்ட செயலிகளை நீங்கள் மீட்டெடுக்க முடியும். ஒரு செயலியை தொலைபேசியில் இருந்து நீக்குவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அல்லது தெரியாமல்கூட டெலிட் செய்து இருக்கலாம். அப்படி, தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் ஒரு செயலி உங்கள் போனில் இருந்து நீக்கப்பட்டிருந்தால் கூட அதனை ஈஸியாக மீட்டெடுக்கலாம்.
மேலும் படிக்க | அமேசானின் புதிய வசதி! இனி EMIல் எளிதாக பொருட்களை வாங்க முடியும்!
இந்தப் படிகளைப் பின்பற்றி ஆப்ஸை மீட்டெடுக்கவும்
- முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கூகுள் பிளே ஸ்டோரை திறக்க வேண்டும்.
- இப்போது மேல் வலதுபுறத்தில் தெரியும் உங்கள் சுயவிவர ஐகானைத் தட்ட வேண்டும்.
- இப்போது நீங்கள் Apps மற்றும் Manage apps விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இதற்குப் பிறகு நீங்கள் ஒரு தனிப் பகுதியைக் காண்பீர்கள், அதில் அனைத்து பயன்பாடுகளின் கண்ணோட்டம் தெரியும். இங்கே நீங்கள் Manage என்பதைத் கிளிக்செய்து, Uninstalled' என்பதற்கு பதிலாக 'Installed' என்பதற்கு மாற வேண்டும்.
- உங்கள் மொபைலில் இருந்து நீக்கப்பட்ட ஆப்ஸின் பட்டியலை நீங்கள் திரையில் காண்பீர்கள். இந்த வழியில் நீங்கள் எளிதாக செயலிகளை மீட்டெடுக்க முடியும்.
நீக்கப்பட்ட செயலிகளின் பட்டியலை இது போன்ற Android சாதனங்களில் காணலாம். ஆனால் அத்தகைய விருப்பம் iOS-ல் இல்லை. இருப்பினும், தரவு காப்புப் பிரதி எடுக்கப்பட்டு ஒரு ஆப்பிள் சாதனத்திலிருந்து மற்றொரு சாதனத்திற்கு மீட்டமைக்கப்படலாம். இது தவிர, நீங்கள் iPhone இல் iCloud கணக்கிலிருந்து செயலிகள் மற்றும் தரவை மீட்டெடுக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ