ChatGPT-க்கு மூளையாக இருந்தவர் யார் தெரியுமா? எலோன் மஸ்குக்கு என்ன தொடர்பு?

சாட்ஜிபிடியை உருவாக்கியவர் சாம் ஆல்ட்மேன். சாம் ஆல்ட்மேன் OpenAI-ன் CEO ஆவார். சாம் 2015-ல் எலோன் மஸ்க் உடன் இணைந்து இந்த நிறுவனத்தை நிறுவினார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 4, 2023, 06:01 PM IST
ChatGPT-க்கு மூளையாக இருந்தவர் யார் தெரியுமா? எலோன் மஸ்குக்கு என்ன தொடர்பு? title=

தொழில்நுட்ப உலகில் ChatGPT ஒரு வித்தியாசமான புரட்சியைக் கொண்டு வந்துள்ளது. ChatGPT வந்த பிறகு, கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களும் AI-ன் பந்தயத்தில் இறங்க ஆரம்பித்துள்ளன. செயற்கை நுண்ணறிவு நீண்ட காலமாக இருந்து வந்தாலும், Search Engine போன்ற AI சாட்போட்டை ChatGPT அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் ஓவர் நைட்டில் ஓபாமா என்ற வகையில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது ChatGPT. மிக குறுகிய காலத்தில் அதிக பயனர்களை பெற்ற தொழில்நுட்பமாகவும் இது இப்போது உள்ளது. பள்ளி குழந்தைகள் முதல் டெக் நிபுணர்கள் வரை அனைவரும் சாட்ஜிபிடியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சாட்ஜிபிடியை உருவாக்கிய சாம் ஆல்ட்மேன் யார்? அவருக்கும் எலோன் மஸ்குக்கும் என்ன தொடர்பு என்பதை இங்கே பார்க்கலாம்.  

மேலும் படிக்க | இனி சர்வமும் AI மட்டுமே - எலான் மஸ்க் வைத்திருக்கும் மாஸ் பிளான்..! 

ChatGPTயை உருவாக்கியவர் யார்?

சாட்ஜிபிடியை உருவாக்கியவர் சாம் ஆல்ட்மேன். சாம் ஆல்ட்மேன் OpenAI-ன் CEO ஆவார். சாம் 2015-ல் எலோன் மஸ்க் உடன் இணைந்து நிறுவனத்தை நிறுவினார். சாம் தன்னுடைய 8 வயது முதல் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டு கோடிங் உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களை கற்று தேர்ந்துள்ளார். இவருடைய முழு பெயர் சாம் ஆல்ட்மேன் செயின்ட் லூயிஸ். மிசோரியில் வளர்ந்தார். சிறுவயதிலேயே மேகிண்டோஷின் நிரலாக்கத்திலும் அவர் சிறந்து விளங்கினார். சாம் ஆல்ட்மேன் ஓரின சேர்க்கையாளர்.

சாம் ஆல்ட்மேன் ஏன் கல்லூரியை விட்டு வெளியேறினார்?

சாம் ஆல்ட்மேன் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மாணவராக இருந்தார். ஆனால், இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து லுப்டில் (நண்பர்கள் தங்கள் இருப்பிடத்தைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் செயலி) செயலி உருவாக்கத்தில் ஈடுபட்டதற்காக கல்லூரியை விட்டு வெளியேறினார். அவர் இந்த செயலியில் சிறப்பாக பணியாற்றினார். பின்னர் இந்த நிறுவனத்தை 43 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்றார். லுப்டில் நிறுவனத்தில் இணை நிறுவனராக இருந்த ஒருவருடன் சுமார் 9 ஆண்டுகள் சாம் டேட்டிங் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பிறகு, ஹைட்ராசின் கேபிட்டலை நிறுவினார். 

ஓபன்ஏஐ-க்கும் எலோன் மஸ்க்கிற்கும் என்ன தொடர்பு?

OpenAI 2015-ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் சாம் ஆல்ட்மேன் மற்றும் எலோன் மஸ்க் ஆகியோர் இருந்தனர். ஆனால்,  எலோன் மஸ்க் 2018-ல் OpenAI-லிருந்து ராஜினாமா செய்தார். ஏனெனில் அவரது மற்ற இரண்டு நிறுவனங்களான SpaceX மற்றும் Tesla ஆகியவை AI தொழில்நுட்பத்தில் பணிபுரிந்தன. 2019 ஆம் ஆண்டில், OpenAI தன்னை ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாக அறிவித்தது மற்றும் மைக்ரோசாப்ட் மற்றும் பிற பெரிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தது. OpenAI ஆனது அதன் தொடக்கத்தில் இருந்து ChatGPT மற்றும் DALL.E போன்ற பல AI கருவிகளை உருவாக்கியுள்ளது. இரண்டுமே இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் படிக்க | சாட்ஜிபிடி-க்கு போட்டியாக எலான் மஸ்க் உருவாக்கும் புதிய ஏஐ - நாளுக்கு நாள் எகிறும் போட்டி

மேலும் படிக்க | வந்தாச்சு அப்டேட்… வாட்ஸ்அப்பில் இந்த புதிய வசதி அறிமுகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News