சியோமி (Xiaomi) அதன் தளத்தில் நட்பு தின விற்பனையை அறிமுகம் செய்துள்ளது. இந்த விற்பனையில், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் ஷாப்பிங் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. நீங்கள் எஸ்பிஐ கார்டு வாடிக்கையாளராக இருந்தால், விற்பனையில் ரூ .3,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும், அதே நேரத்தில் நீங்கள் எச்டிஎஃப்சி கார்டு பயன்படுத்துபவராக இருந்தால் விற்பனையில் இருந்து ரூ .7,500 வரை தள்ளுபடி பெற முடியும். இதன் முழு விவரத்தை இங்கே பார்போம்.
Mi.com இலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, Redmi Note 10S இல் வாடிக்கையாளருக்கு ரூ .1,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது, இந்த தள்ளுபடியை (Discount on Smartphone) நீங்கள் HDFC கார்டு மூலம் பெறலாம். Redmi Note 10S 6.43-இன்ச் முழு எச்டி + AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 1080 × 2400 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் வருகிறது. தொலைபேசி திரையின் பாதுகாப்பிற்காக, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பொருத்தப்பட்டுள்ளன.
ALSO READ | Redmi Note 10S vs Moto G40 Fusion: இரண்டுமே ரூ.15,000-க்குள்; ஆனால் எது பெஸ்ட்?
இது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலானது. இந்த சாதனம் டீப் சீ ப்ளூ, ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் ஷேடோ பிளாக் கலர் ஆப்ஷன்களில் வருகிறது. Redmi Note 10S ஸ்மார்ட்போன் 6GB ரேம் + 64GB சேமிப்பு மற்றும் 6GB ரேம் + 128GB சேமிப்பு இல் கிடைக்கிறது.
தொலைபேசியில் குவாட் கேமரா அமைப்பு
கேமராவை பொறுத்த வரை, Redmi Note 10S ஸ்மார்ட்போனில் குவாட் கேமரா அமைப்பு உள்ளது, இதில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டீப் சென்சார் உள்ளது. செல்ஃபிக்காக தொலைபேசியின் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் 5,000mAh பேட்டரி உள்ளது, இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. பாதுகாப்பிற்காக, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR