தஞ்சை-திருச்சி நகரங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிகட்ட நிலையை அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
தஞ்சை மற்றும் திருச்சி ஆகிய இரு நகரங்களிடையே சுமார் 49 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ 450 கோடி மதிப்பில் இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.
இப்பணியில் 13 பெரிய பாலங்கள், 90 சிறிய பாலங்கள் மற்றும் 3 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணி முடிந்துவிட்டன.
இந்நிலையில் இறுதிக்கட்ட பணியாக தஞ்சை ரயில் நிலையம் அருகில் இரண்டாவது ரயில் பாதைக்கான தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வரும் 28-ம் தேதி முதல் இந்த இரட்டை ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேவேலையில் பணத்தில் ரயில்களின் காத்திருப்பு நேரம் குறைக்கப்படும் என்பதால் பயண நேரமும் குறையும் என தெரிகிறது. அதாவது தற்போது 1.15 மணி நேரத்திலிருந்து 40 நிமிடங்களாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது!