நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2 -1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் ஒரு நாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
டெல்லியில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்திய அணியும், ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றது.
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.
டாஸ் போடுவதில் வானிலை காரணமாக சற்று தாமதம் ஆகும் எனத் தெரிகிறது. தற்போது நிலவரப்படி மழை பெய்து வருவதால், டாஸ் போடுவதில் கால தாமதம் ஆகும். தற்போது மழை நின்று விட்டது. ஓவர்கள் குறைத்து ஆட்டம் ஆரம்பிக்கப் படும் என எதிர்பார்க்கப்பட்டது. 9 மணிக்கு ஆட்டம் ஆரம்பிக்கலாம் என தெரிகிறது.
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற இருந்தது. உள்ளது. ஆனால் அங்கு மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது அங்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் பிற வீரர்கள் கால்பந்து விளையாடி வருகின்றனர்.
வீடியோ:
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.
டாஸ் போடுவதில் வானிலை காரணமாக சற்று தாமதம் ஆகும் எனத் தெரிகிறது. தற்போது நிலவரப்படி மழை பெய்து வருவதால், டாஸ் போடுவதில் கால தாமதம் ஆகும். தற்போது மழை நின்று விட்டது. ஓவர்கள் குறைத்து ஆட்டம் ஆரம்பிக்கப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மாலை நடக்க இருக்கிறது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
டெல்லியில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்திய அணியும், ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இதையடுத்து மூன்று டி-20 போட்டிகளை கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
டோனிக்கும் எனக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த பலர் முயற்சி செய்தார்கள் என்று இந்திய கிர்கெட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
டோனியுடன் இருக்கும் உறவு குறித்த கேள்விகளுக்கு கோலி பதில் அளித்தார். அதில், எங்களுக்கு இடையில் விரிசலை உருவாக்கும் நோக்கில் பலரும் பேசினார்கள். ஆனால், நாங்கள் அதுபோன்ற செய்திகளை படிப்பதே இல்லை.
நாங்கள் ஒன்றாக இருப்பதை பார்க்கும் போது அவர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள். எங்களுக்கிடையில் விரிசல் ஏற்படாதா என்று பார்க்கிறார்கள். நாங்கள் அதனைப்பற்றியெல்லாம் எங்களுக்குள் பேசி சிரித்துக் கொள்வோம்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி அவர்களின் மகள் ஸிவா டோனி தான், இந்திய சமூக ஊடகவியலாளர்களின் தற்போதைய செல்லக்குட்டி!
இரண்டு வயதான அவர், சமீப காலமாக தனது Instagram பக்கத்தின் பதிவுகள் மூலம் நெட்டிசன்களின் மத்தியில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்துள்ளார்.
அந்த இடத்திற்கு அவர் பொருத்தமானவரும் கூட என்பதை நிறுபிக்கும் வகையினில் அவரது சமீபத்திய வீடியோ பதிவு ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த வீடியோவில் அவர், கிருஷ்ணர் பாடல் ஒன்றினை மலையாள மொழியில் பாடி அனைவரது உள்ளங்களையும் கவர்ந்துள்ளார்!
நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கலைக்கட்டி கொண்டாடப்பட்டது. நாட்டு மக்கள் அனைவரும் தங்களது குடும்பங்களுடன் இனைந்து தீபாவளியை கொண்டாடினர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி அவரின் சொந்த ஊரில் உள்ள தியோரி கோவியிலில் சாமி தரிசனம் செய்தார். டோனியின் வருகையால் அங்கு ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர்.
Jharkhand: Cricketer Mahendra Singh Dhoni offered prayers at Deori temple in Bundu's Tamar pic.twitter.com/s0ykN9SEqx
இந்திய கேப்டன் விராத் கோலியின் அறக்கட்டளையும், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் தொண்டு நிறுவனமும் இணைந்து தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்யும் விதமாக நட்சத்திர கால்பந்து போட்டி நடத்தியது. இந்த போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது.
இதில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்(ஆல் ஹார்ட் எஃப்சி) அணியும், பாலிவுட் நட்சத்திரங்கள்(ஆல் ஸ்டார் எஃப்சி) அணியும் மோதின. இந்த போட்டியில் ஆல் ஹார்ட் எஃப்சி அணி 7-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை டோனி பெற்றார்.
இந்திய கேப்டன் விராத் கோலியின் அறக்கட்டளையும், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் தொண்டு நிறுவனமும் இணைந்து தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்யும் விதமாக நட்சத்திர கால்பந்து போட்டி நடத்தியது. இந்த போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது.
இதில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்(ஆல் ஹார்ட் எஃப்சி) அணியும், பாலிவுட் நட்சத்திரங்கள்(ஆல் ஸ்டார் எஃப்சி) அணியும் மோதின. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்(ஆல் ஹார்ட் எஃப்சி) அணியில் 5-வது நிமிடத்தில் தல டோனி அடித்த கோல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவர் 39-வது நிமிடத்தில் 2-வது கோலும் அடித்தார்.
வீடியோ:-
அப்பா டோனிக்கு மகள் ஸிவா தண்ணீர் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி. போட்டிகள் இல்லாத நேரத்தில் இவர் தனது மகளுடன் நேரத்தை செலவழிக்கும் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களையும் சமூக வலைதளங்களில் அவர் ஷேர் செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது பயிற்சி ஆட்டத்துக்குப் பின் கொடுக்கப்பட்ட இடைவெளியில் அவரது மகள் ஸிவா மைதானத்திற்கு வந்து அப்பாவுக்கு தண்ணீர் கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் டோனியின் மகள் ஸிவாவுடன் விளையாடி பொழுது போக்கிய வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் போட்டி ராஞ்சியில்நடைபெற்று இந்தியா வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக டோனி உயர்ந்ததற்கு முழு காரணம் கங்குலி செய்த தியாகம் மேலும் காட்டிய கருணையும் தான் என இந்திய கிர்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியிருப்பது தற்போது சர்ச்சையாக கிளம்பியது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சேவாக் அளித்த பேட்டியில் இந்திய அணியின் தேர்வு முறை, முன்னாள் வீரர்களின் செயற்பாடு என பலவற்றைப் பற்றி விரிவாக பேசினார். அப்போது டோனியின் தேர்வு குறித்து சேவாக் கூறியதாவது:-
இன்று, இந்தியா தனது முதல் டி20 கோப்பையினை கைப்பற்றிய தினம்!
செப்டம்பர் 24, 2007 அன்று, ஜோகன்னஸ்பர்க்கில் நடைப்பெற்ற டி20 உலக கோப்பையினில் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்ற தினம். இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைந்து 10 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.
இந்த வெற்றியின் நொடிகளை BCCI தனது ட்விட்டர் பக்கத்தினில் வெளியிட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முடிவடைந்தது.
இந்த போட்டியில் இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியானது சுமார் 10.30 மணியளவில் முடிவடைந்தது.
இரு அணிகளுக்கும் இடையிளான இரண்டாவது ஒருநாள் வரும் வியாழக்கிழமை கொல்கத்தாவில் நடக்கவுள்ளதால் நேற்றைய போட்டி முடிவடைந்தவுடன் இந்திய அணி கொல்கத்தா விரைந்தனர். அப்போது விமான நிலையத்தினில் டோனி சற்று நேரம் ஓய்வெடுத்தார்.
அந்த தருனத்தின் புகைப்படங்கள் தற்போது இனையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இணைத்து உள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோலிக்கு இது 30-வது சதம் ஆகும். இந்த சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையை கோலி சமன் செய்துள்ளார்.
அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். சச்சின் சாதனை முறியடிக்க கோலிக்கு இன்னும் 20 சதங்கள் தேவை.
ஒருநாள் போட்டிகளில் 100 ஸ்டம்பிங் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமை இந்தியாவின் முன்னாள் கேப்டன் டோனிக்கு கிடைத்துள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வந்தன. 4 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வென்றது. நேற்று 5-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் இலங்கை அணியுடன் நேற்று நடந்த 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், சாஹல் பந்துவீச்சில் அகிலா தனஞ்ஜெயாவை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றியதன் மூலமாக டோனி இந்த சாதனையை நிகழ்த்தினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து கிரிக்கெட் அகாடமியை அந்நாட்டில் தொடங்க இருக்கிறார்.
தற்போதைய ஒருநாள் அணியின் விக்கெட் கீப்பராக உள்ள டோனி துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து அந்நாட்டின் எம்.எஸ்.டோனி என்ற பெயரில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்க இருக்கிறார்.
இந்த கிரிக்கெட் அகாடமியை ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து.
கடந்த மாதம் 24-ம் தேதி இங்கிலாந்தில் 11வது ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் தேர்ச்சி ஆனார்கள்.
இந்நிலையில் இந்தியாவும், இங்கிலாந்தும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று சந்தித்தன.
2-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று சென்னையில் தொடங்கியது. தொடக்க விழாவில் சிக்சர் அடிக்கும் போட்டி நடந்தது. இதில் இந்திய அணியின் முன்னாள் காப்டனாக இருந்த டோனி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் உள்பட 8 வீரர்கள் கலந்து கொண்டனர்.
பவுலிங் எந்திரம் மூலம் தலா 3 முறை பந்துகள் வீசப்பட்டது. இதில் டோனி 3 பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டார். ஹைடன், பத்ரிநாத், அனிருதா தலா 2 சிக்சர் அடித்தனர். எல்.பாலாஜி ஒரு சிக்சர் அடித்தார். மொகித் சர்மா, பவான் நெகி, கணபதி ஆகியோர் சிக்சர் அடிக்கவில்லை.
இந்த விளையாடிற்கு பின்னர் டோனி கூறியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.