“தமிழகம் சமூகநீதியின் தொட்டில்; அதை நீர்த்துப்போகச் செய்யும் பணியில் மத்திய - மாநில அரசுகள் ஈடுபடுவதை திமுக ஒருக்காலும் அனுமதிக்காது” என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக் கொள்ள மாட்டேன் என்றும் அப்படியே கிழிந்தாலும் வேறு சட்டை மாற்றிக்கொண்டுதான் வருவேன் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுகவின் எதிர்ப்பை மீறி ஜிஎஸ்டி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கடந்த ஜூன் 13-ம் தேதி தாக்கல் ஜி.எஸ்.டி மசோதா செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி மசோதா குறித்த விவாதம் நடந்தது.
கடும் அமளிக்கிடையே ஜிஎஸ்டி சட்ட மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபை வரும் 14-ம் தேதி கூடுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை பொறுப்பு செயலாளர் இன்று வெளியிட்டுள்ளார். இந்த கூட்டத்தொடரில் உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
சுமார் ஒரு மாதம் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற இருக்கிறது.
இந்த சட்டசபை கூட்டத்தொடரில், உள்ளாட்சி தேர்தலில் அமல்படுத்தப்பட உள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.