மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட கிழக்கு கோபுர நுழைவு வாயில் தவிர பிற வாயில்கள் வழியே பக்தர்கள் அனுமதி.
டெல்லி லோக் நாயக் பவனில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டடத்தில் மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
லோக் நாயக் பவனில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைத்துள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சுமார் 26 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து புகை மூட்டம் வெளியேறிய வண்ணம் உள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அந்த வழியாக செல்லும் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
சிவகாசி புறவழிச்சாலையில் உள்ள பட்டாசுக் கிட்டங்கியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசுகள் வெடிக்க தொடங்கியதை அடுத்து கிடங்கில் உள்ள தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்க 2 தீயணைப்பு வாகனத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசுகள் வெடித்துச் சிதறுவதால் தீயணைப்பு வீரர்களால் கிட்டங்கியை நெருங்க முடியவில்லை.
ஈராக் நாட்டில் பாக்தத்தில் உள்ள யார்மோக் மகப்பேறு மருத்துவமனையில் மின் கோளாறினால் ஏற்பட்ட தீவிபத்தில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் பலியானார்கள். இந்த மருத்துவமனையில் இருந்து 7 குழந்தைகளையும் 29 பெண்களையும் பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்கபட்டு வேறு மருத்துவமனைக்கு மாற்றபட்டு உள்ளனர்.
ஈராக்கின் தலைநகரான பாக்தாத்துக்கு தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளால் மிரட்டல் இருந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில், மட்டும் ஐ.எஸ் அமைப்பினரால் 300-க்கு மேற்பட்ட பொது மக்கள் கொல்லபட்டு உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.