கரீபியன் தீவுகளில் ஏற்பட்டுள்ள மிக சக்திவாய்ந்த இர்மா சூறாவளியால் 12 பேர் பலி. மேலும் செயிண்ட் மார்டின் தீவு மிகவும் மோசமாக பாதிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மிக சக்திவாய்ந்த மணிக்கு சுமார் 200 கி.மீ. வேகத்தில் வீசும் சூறாவளி அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ளது. இந்த இர்மா சூறாவளியால் கரீபியன் தீவில் உள்ள போர்ட்டோரிகா, அன்டிகுவா, பர்புடா, செயின்ட் மார்ட்டின் தீவு, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவு போன்றவை கிட்டத்தட்ட 95 சதவிகிதம் அழிக்கப்பட்டுவிட்டது. முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் இர்மா சூறாவளி சேதங்களை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவில் போர்ட் மையர்ஸ் என்ற இடத்தில் உள்ள இரவு விடுதியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள். 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்துள்ளனர். அந்த இரவு விடுதியில் 15-க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பயங்கரவாத தாக்குதல் பின்னணி உள்ளதா என்பது குறித்து கருத்து தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.