தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் 'பேட்மேன் சவால்' அடுத்து இந்திய பெண்கள் மல்யுத்த அணியினர் சுகாதார பட்டைகள் (sanitary pads ) ஏந்தி புகைப்படம் ஒன்றினை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்!
சமுக வலைதளமான பேஸ்புக் பயனாளர்களில் மொத்தம் 27 கோடி போலி கணக்குகள் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் சமீபத்தில் தனது காலாண்டு வருமான அறிக்கையை வெளியிட்டது. அதில் அதிகரித்துள்ள போலி கணக்குகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக ஒரு கோடி போலி கணக்குகள் என்கிற அளவில் இருந்ததாகவும், ஆனால் தற்போதைய ஆய்வின்படி 27 கோடி போலி கணக்குகள் இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
பேஸ்புக் நிறுவனம் ஆன்லைனில் உணவு விற்பனையை தொடங்கியுள்ளது. பேஸ்புக் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய வசதியின் படி வாடிக்கையாளர்கள் பேஸ்புக் செயலியை கொண்டே உணவு வகைகளை முன்பதிவு செய்ய முடியும்.
இந்நிலையில், விருப்பமான உணவுகளை ஆர்டர் செய்யும் வசதியையும் பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. பேஸ்புக்கில் உள்ள Explore என்ற மெனுவில் Order Food என்ற பகுதிக்குச் சென்று உணவை ஆர்டர் செய்யலாம்.
முதலில் அமெரிக்காவில் மட்டும் கிடைக்கும் இந்த வசதி விரைவில் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யூனிலீவர்-க்கு சொந்தமான ’டவ்’ தனது பேஸ்புக் பக்கத்திலுருந்து ஒரு "மூன்று நிமிட விளம்பர வீடியோ கிளிப்" ஒன்றை நீக்கியுள்ளது. அதுமட்டும் அல்லாமல் அந்த வீடியோவினை பதிவிட்டதற்காக அந்நிறுவனம் மக்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளது!
இரத்த தானத்தினை ஊக்குவிக்கும் வகையினில் பேஸ்புக் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்ய உள்ளது.
வரும் அக்டோபர் 1 முதல் இந்த வசதி பேஸ்புக்கில் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் இரத்த தேவை உள்ளவர்களும், தங்களது இரத்தத்தினை தானம் செய்ய விரும்புவோரும் எளிதில் தொடர்புகொள்ளும் வகையினில் பல அம்சங்கள் கொண்டுவரப்படவுள்ளது.
இந்த வசதி மூலம் இரத்த தேவை உள்ளவர்கள், தங்களது வேண்டுகோளினை பதிவுசெய்ய சிறப்பு அம்சங்களை புகுத்தவுள்ளது பேஸ்புக்.
சீனாவில் ஒரு சில சமுக வலைத்தளங்களை பயன்பதுத்த மகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றே தற்போது வாட்ஸ் அப் செயலி பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்சமய தகவலின் படி சீன அரசாங்கம் வாட்ஸ் அப் செயலிக்கு தடை விதித்துள்ளது என்றும் சீனா முழுக்க வாட்ஸ் அப் சேவை முழுமையாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் சீனா முழுக்க பலமுறை வாட்ஸ் அப் பயன்பாடு தடைப்பட்டது. வாடிக்கையாளர்களால் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியாத சூழல் நிலவி வந்தது.
சமூக ஊடகங்களின் ஜாம்பவானான பேஸ்புக் வீடியோ அரட்டை சாதனம் ஒன்றை தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த சாதனம் அமேசானின் எக்கோ ஷோக்கு ஒத்ததாகக் கூறப்படுகிறது, மற்றும் ஒரு கேமரா, தொடுதிரை மற்றும் ஒலிபெருக்கிகள் இதில் இடம்பெறும் என 'தி இன்டிபென்டன்ட்' தெரிவித்துள்ளது
எனினும் இச்சாதனம் நுகர்வோர் மத்தியில் அச்சத்தை எழுப்பியுள்ளது, காரணம் இது சமூக வலைப்பின்னல் மூலம் இனைக்கப் பட்டுள்ளதால் உளவு பார்க்க இயலும் என கருத்துகள் பரவி வருகிறது'.
இச்சாதனத்தை வரும் ஆண்டு மே மாதம் பேஸ்புக் வெளியிட திட்டமிட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் ஸ்டேடசை இன்னும் சுவாரசியமாக ஆக்கும் வகையில், புதிய சிரப்பம்சத்தினை தற்போது வடிக்கையளர்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த சிறப்பம்சத்தினை பெருவதர்ற்கு பயனர்கள் தங்களுடைய வாட்ஸ்ஆப்னை அப்டேட் செய்தால் போதுமானது. ஆன்ட்ராயிட் மற்றும் ஐஓஎஸ் பயனர் இவர்களுக்கும் இச்சேவை பொருந்தும்.
என்ன புதிதாக இணைகிறது?
* தங்களது ஸ்டேடஸ்-னை யார் பார்க்க வேண்டும்?
* விருப்பமான எழுத்தில் ஸ்டேடஸ்
* விருப்பமான பின் திரை
போன்ற சிறப்பம்சங்கள் இணைந்துள்ளது. மேலும் எளிதில் செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. பெண் ரசிகைகளே இவருக்கு அதிகம் என்னும் அளவுக்கு திறமை கொண்டவர்.
எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் அதனால் துவண்டுவிடாத சிம்பு, சமீபத்தில் அவரது அடுத்த படம் குறித்த அதிரடி அறிவிப்புகளை தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்களில் இருந்து தான் வெளியேறுவதாக சிம்பு அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் இறுதியாக குறிப்பிட்டிருந்த விளக்கம் வருவதாவது,
மேற்கு வங்க மாநிலத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் பதிவு செய்த தகவலை தொடர்ந்து பாதுரியா பகுதியில் கலவரம் ஏற்பட்டது.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது நிலைமை லேசாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம், கர்வால் மாவட்டத்தில் உள்ள சட்புலி நகரில் இதேபோன்று ஒரு வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சட்புலி நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவன் கேதர்நாத் தலத்தை பற்றி பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இருதரப்பினரிடையே வன்முறை வெடித்தது.
பேஸ்புக் அறிமுகம் செய்துள்ள புதிய வசதியின் படி வாடிக்கையாளர்கள் பேஸ்புக் செயலியை கொண்டே உணவு வகைகளை முன்பதிவு செய்ய முடியும்.
முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதியை இயக்க பேஸ்புக் வாசிகள், செயலியில் வழங்கப்பட்டுள்ள ஹைாம்பர்கர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உணவகங்களில் இருந்து உணவு வகைகளை டெலிவரி.காம் அல்லது ஸ்லைஸ் தளம் மூலம் ஆர்டர் செய்யலாம்.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் பேஸ்புக், இந்த ஆண்டின் இறுதிக்குள் 200 கோடி மாதாந்திர பயனர்களை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
பேஸ்புக்குடன் இணைந்து செயல்பட்டு வரும் வாட்ஸ் அப் இந்தியாவின் 200 மில்லியன் பயனாளர்களுக்கென புதிய அப்டேட் ஒன்றினை தரவிருக்கிறது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் இந்த புதிய அப்டேட்டை விரைவில் கொண்டுவரப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.