ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா முர்மு நியமனம். ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் (Satya Pal Malik) கோவாவுக்கு மாற்றப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் சம்பளம் வழங்க உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.
370 வது சட்டபிரிவை நீக்கிய பிறகு நாட்டின் எந்த பகுதியில் இருக்கும் குடிமகனும் காஷ்மீரில் நிலம் வாங்க முடியும். முதலில் காஷ்மீரிகள் மட்டுமே நிலம் வாங்க முடியும். தற்போது அனைவரும் வாங்க முடியும்.
இந்திய எல்லைப் பகுதியான லஷ்கர் பகுதியில் உள்ள பாங்கோங் ஏரியின் கரையோரத்தில் இந்திய எல்லையில் நுழைவதற்கு சீனப் படையினர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து, இந்திய மற்றும் சீனாவின் இராணுவ அதிகாரிகள் புஷ்ஷின் லெபியின் சுஷ்லுல் பகுதியில் ஒரு கூட்டத்தை நடத்துகின்றனர்.
சீன-இந்தியா எல்லையுடனான சமாதானத்தையும் அமைதியையும் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய-சீன படைகள் நேருக்குநேர் அணி திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லடாக் டிவிஷன், சீன எல்லை ஓரம் அமைந்துள்ளது. அங்குள்ள சில பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
சீன எல்லையருகேயுள்ள லடாக் பகுதியில் 100 ராணுவ டாங்குகளை இந்திய ராணுவம் நிறுத்தி வைத்துள்ளது.
இந்திய எல்லையில் சீனா அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அருணாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இந்தியா- சீனா இடையே கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியா சீனா இடையே போர் மூண்டது. அப்போது, இங்கு ராணுவ டாங்குகள் மூலம் இந்தியா தாக்குதல் நடத்தியது. தாக்குதலுக்கு பின்னர் டாங்குகள் திரும்ப பெறப்பட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.