இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் இறந்து விட்டதாக, அதிகார் அபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூலூரிலிருந்து இன்று காலை குன்னூர் வெலிங்டன் ராணுவ தளத்திற்கு இந்திய முப்படைகளின் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.
வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து சூலூர் சென்ற ராணுவ உயர் அதிகாரிகள் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளானது.
மனித உரிமைகளுக்கான நாகா மக்கள் இயக்கம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகாலாந்தில் இராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் அங்குள்ள சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்துவது 1954 ஆம் ஆண்டு முதல் தொடர் கதையாகி வருகிறது என சாடியுள்ளது.
நாகாலாந்து படுகொலை சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள ராணுவம் அச்சம்பவம் குறித்து உயர்மட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.
ஜம்மு -காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய என்கவுன்டரில் ஜூனியர் கமிஷன்ட் அதிகாரி (Junior Commissioned Officer, JCO) உட்பட 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
சென்னையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரி பயிற்சி அகாடமியில் உள்ள பிரின்ஸ் என்ற 16 வயது குதிரைக்கு பொது-அதிகாரி-கமாண்டிங்-இன்-சீஃப் ராணுவ பயிற்சி கட்டளை (ARTRAC) பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட காய்கறி வியாபாரி பேஸ் காம்பில் பணியில் இருந்த ஒரு இராணுவ அதிகாரியிடமிருந்து முக்கியமான ஆவணங்களைப் பெற்று அவற்றை பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ-க்கு வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
சீனாவில் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. இஸ்லாமிய குடியரசான பாகிஸ்தானின் நெருங்கிய நண்பன் என்பதை சீனா இந்த விஷயத்திலும் பின்பற்றுகிறது. கம்யூனிச நாடான சீனா, பாகிஸ்தான் சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய அதே சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கிழக்கு-மத்திய வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது. வங்கக்கடலில் உருவாகி உள்ள இந்த தாழ்வு நிலை இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவலை கசியவிட்டது தொடர்பாக ராணுவத்தை சேர்ந்த சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் Honey-Trap எனப்படும் சமூக ஊடகம் மூலமாக உளவு பார்க்கும் பெண்ணின் வலையில் சிக்கியிருந்தார்.
10 ஜவான்கள் தங்கும் அளவுக்கு சிறிய கூடாரம் இந்திய ராணுவத்திற்காக உருவாக்கப்படுகிறது. சூரிய மின்சக்தியால் வெப்பமூட்டப்படும் உலகின் முதல் டெண்ட் என்பது இதன் சிறப்பம்சம். கூடாரத்தின் எடை 30 கிலோவிற்கும் குறைவு. அதோடு, ஒரு நாளுக்குள் முழுமையாக உருவாக்கிவிடலாம் என்பதும் இதன் சிறப்பம்சம்.
நம் வாழ்வை நிம்மதி நிறைந்த பூங்காவாக்க, பனிப் பாறைகளிலும் பாலைவனங்களிலும் இரவும் பகலும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் வீர்ரகளை எப்போதும் நம் நினைவில் கொள்வது அவசியமாகும்
இந்திய ராணுவத்தினருக்கு பலவிதமான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இமயமலைப் பகுதியை எல்லையாக கொண்டுள்ள இந்திய நாட்டை காக்கும் ராணுவத்தினருக்கு கடுமையான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன...
லடாக், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய எல்லை பகுதிகளில் உளவு தகவல்களை சேகரிப்பதில் சீனா ஈடுபட்டுள்ளது என்பதை இந்திய புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.