குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: கருப்புப் பெட்டியைத் தேடும் ராணுவத்தினர்

சூலூரிலிருந்து இன்று காலை குன்னூர் வெலிங்டன் ராணுவ தளத்திற்கு இந்திய முப்படைகளின் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 8, 2021, 05:10 PM IST
  • குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்த போது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
  • இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • விபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி நிலை குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து:  கருப்புப் பெட்டியைத் தேடும் ராணுவத்தினர் title=

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை ராணுவத்தின் வசம் சென்றுள்ளது.

சூலூரிலிருந்து இன்று காலை குன்னூர் வெலிங்டன் ராணுவ தளத்திற்கு இந்திய முப்படைகளின் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

இந்நிலையில், குன்னூர் அருகே ஹெலிகாப்டர் சென்ற போது விபத்துக்குள்ளானது. இதில் தற்போது வரை 10 பேர் பலியாகியிருக்கிறார்கள்.4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் , விபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி நிலை குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

ALSO READ | குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: அவசர மத்திய அமைச்சரவை கூட்டம்!

ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியின் பதிவுகளை வைத்தே விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என்பதால் கருப்புப்பெட்டியை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை ராணுவத்தின் வசம் சென்றுள்ளது. அந்த சாலையில் எல்லா போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது."

சூலூர் இடையே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் சென்று பின்னர் நீலகிரிக்கு செல்கிறார்.

குன்னூர் அருகே வானில் பறந்துகொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.  குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.  இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணித்ததை உறுதி செய்தது இந்திய விமானப்படை.  இந்த விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் ராணுவம் உத்தரவுவிட்டுள்ளது. 

ALSO READ | Breaking News: நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து: நான்கு பேர் பலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News