12ம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பிடத்தை சுத்தம் செய்ய ஜெர்மனி நாட்டில் இருந்து ரோட்டரி சங்கம் சார்பில் 1000 வாகனங்கள் தமிழகம் வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை 10 நாள் விடுமுறைக்குப்பின் நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது. இதையடுத்து, பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் SSLC (எஸ்.எஸ்.எல்.சி.,) தேர்வு முடிவுகள் 23 ஆம் தேதி வெளியாகிறது. இந்த தேர்வு முடிவு புதன்கிழமை (நாள் 23) காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் பார்க்கலாம்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியவர்களில் 91.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் ஒரு சதவிதம் குறைந்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 92.1% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இவற்றை, www.tnresults.nic.in, www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in. என்ற இணையதள முகவரிகளில் பார்க்கலாம்.
மாணவர்களின் குழப்பத்தை நீக்கும் வகையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் இன்று வெளியாக உள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் அளித்த பேட்டி:-
பொதுத்தேர்வுகளை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் 450 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். அந்த தேர்வு மையங்களில் சனிக்கிழமை தோறும் 3 மணிநேரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் மாணவர்களின் குழப்பத்தை போக்கும் வகையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் இன்று வெளியிடப்படும் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.