திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவினை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை செயல் தலைவராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்காக திமுக பொதுக்குழு சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை கூடியது. கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. எனவே பொதுச்செயலாளர் அன்பழகன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
அன்பழகன் பெயரை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்மொழிய, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வழி மொழிந்தார். இதையடுத்து பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
திமுகவின் பொதுக்குழுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
உடல்நலக்குறைபாடு காரணமாக உயிரிழந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு திமுகவினரின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கியூபாவின் புரட்சியாளரும், பொதுவுடமை போராளியுமான ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
திமுகவின் உயர்மட்டக்குழு உறுப்பினரான மறைந்த தலைவர் கோ.சி.மணி, மூத்த பத்திரிகையாளர் சோ, நடிகர் குமரிமுத்து, திமுவை சேர்ந்த சற்குண பாண்டியன் ஆகியோருக்கும் இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.