திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவினை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.
Supreme Court refuses to entertain the plea filed by Traffic Ramaswamy seeking stay on the last rites of #Karunanidhi at #MarinaBeach. Ramaswamy had moved SC against the Madras High Court order which allowed to perform the last rites of #Karunanidhi at the Marina beach. pic.twitter.com/II9OwEgUWE
— ANI (@ANI) August 8, 2018
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஜூலை 27 ஆம் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை ஏற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி இன்று அரசு விடுமுறை என்றும், அடுத்த 7 நாட்களுக்கு அதாவது ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை ராஜாஜி அரங்கில், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளியூர்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் சென்னை நோக்கி வந்து கொண்டுள்ளனர். ராஜாஜி அரங்கில் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தற்போது திமுக தலைவர் கருணாநிதிக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான நேரம் முடிந்தது இறுதி சடங்கு 4 மணி அளவில் துவங்க உள்ளது.
இந்நிலையில் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்தும், இறுதிச்சடங்கை தடை செய்ய கோரியும் டிராபிக் ராமசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, இறுதிச்சடங்கை நிறுத்த உத்தரவிட முடியாது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியை அணுக உத்தரவிடப்பட்டது.