அமெரிக்கா-இந்தியா இடையேயான இரு தரப்பு பாதுகாப்பு தொடர்பான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும், இந்திய-பிசிபிக் பிராந்தியத்தில் உள்ள சாவலான சூழ்நிலை, பயங்கரவாத குறித்த சவால்கள் ஆகியவை ஆலோசிக்கப்பட்டன.
செயற்கைக்கோள் படங்கள், கண்காணிப்பு கருவிகள் நெட்வொர்க் கருவிகளை ஆகியவற்றின் உதவியுடன் சீன படையின் ஒவ்வொரு அசைவையும் இந்தியா தீவிரமாக கவனித்து வருகிறது.
பத்தாவது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் வட மாநிலங்களில் வாட்டும் குளிருக்கு மத்தியில் சூடு பிடித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு (farm bills) எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பதில் நடவடிக்கை 360 டிகிரியில் நடந்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Defence Minister Rajnath Singh)) தெரிவித்தார்.
சீனா மைக் பாம்பியோவை அவதூறாக பேசியதுடன், பெய்ஜிங்கிற்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாட்டை விதைத்ததாகவும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை குறைத்து மதிப்பிடுவதாகவும் குற்றம் சாட்டியது.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் (Defence Minister Rajnath Singh) ராஜ்நாத் சிங் அக்டோபர் 24-25 தேதிகளில் டார்ஜிலிங் Darjeeling மற்றும் சிக்கிமுக்கு (Sikkim) இரண்டு நாள் பயணம் மேற்கொள்வார் என்று அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் முன்னணி பகுதிகளுக்கு சென்று துருப்புக்களுடன் உரையாடுவார்.
இன்று, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை இந்திய போர் கப்பல் சென்னையிலிருந்து (INS Chennai) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
நமது இராணுவத்தின் கரங்களை வலுப்படுத்துவதற்காக, ₹2,290 கோடி மதிப்பிலான உபகரணங்கள் வாங்க பாதுகாப்பு தளவாடங்கள் கையகப்படுத்தும் கவுன்சில் ஒப்புதல் வழங்கியது.
நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20, 2020) உறுப்பினர்கள் உருவாக்கிய காட்சி அவையின் கௌரவத்தை குலைக்கும் வகையில் இருந்தது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில், விவசாயம் தொடர்பான மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. 2020 ஆம் ஆண்டிற்கான விவசாயிகள் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் எளிமைப்படுத்தல்) மசோதா, மற்றும் விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் மசோதா, மற்றும் விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த மசோதா ஆகியவை குரல் வாக்கு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்திய சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், எந்த ஒரு சூழ்நிலையையும் சாமாளிக்க இந்தியா தயாராக உள்ளது என நாடாளுமன்றத்தில், தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் பார்லியின் பேச்சுவார்த்தைகளின் போது இந்தியா மற்றும் பிரான்சில் இருந்து மேலும் 36 போர் விமானங்களை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.