கடந்த 2023-24ஆம் ஆண்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் 45 ஆயிரத்து 886 கோடி ரூபாய் வருவாயைத் தமிழக அரசு ஈட்டியுள்ளதாகக் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் திறக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.
அடிதடி வழக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒரு நபரை மட்டும் விடுவித்து விட்டதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மீது குற்றம் சாட்டிய பொதுமக்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டங்களை செயல்படுத்தாமல் திமுக அரசு செயற்கையான குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்துவதாக, அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ் பி வேலுமணி தெரிவித்தார்.
நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் முறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று முதல் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை இ - பாஸ் முறையானது அமலுக்கு வந்ததுள்ளது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திற்குள் செல்லும் 13 வழித்தடங்களிலும் இ- பாஸ் சோதனை நேற்று முதல் நடந்து வருகிறது.
கோடை விடுமுறையில் சுற்றுலா தளங்களில் கூட்ட நெரிசலை தடுக்க தமிழ்நாடு அரசு இ-பாஸ் முறையை நடைமுறை படுத்தி உள்ளது. இன்று முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்.
உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து கல்லூரி பேராசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.
வேப்பேரி சாலையில் காவலரின் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்திற்கு 500 ரூபாய் அபாராதம் வசூலித்த போக்குவரத்து ஆய்வாளர். அடுத்த முறை ஸ்டிக்கரை எடுக்காமல் இருந்தால் 1500 ரூபாய் அபராதம்.
பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
சென்னை மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை 19 கிலோமீட்டர் தொலைவிற்கு 2 அடுக்கு பறக்கும் மேம்பாலம் அமைய உள்ளது என்று அமைச்சர் மா.சுபிரமணியன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகே மின்வாரியத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞர் தனது இரு கால்களையும் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்துத் தொழிலாளர் பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் இல்லாத நிலை இருப்பதால், தீர்வு கிடைப்பது சந்தேகம் தான் என அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.