தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விடுமுறை நாட்கள் அரசு அலுவலர்களுக்குப் பொருந்தாது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் விடுமுறை நாட்கள் அரசு அதிகாரிகளுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலையத்தில் பணிபுரியும் செல்லத்துரை என்ற காவலரின் பெயர், நெல்லை மாவட்டம் மானூர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
தூத்துக்குடியில் பச்சிளம் குழந்தைக்கு ஆடை கூட இல்லாமல் எடுத்துக் கொண்டு இளம் பெண் ஒருவர் புகார் அளிக்க வந்தார். பச்சிளம் குழந்தைக்கு புட்டி பாலுட்டி மகளிர் காவல் துறையினர் கவனித்துக் கொண்டனர்.
ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஆளுநர் ஆர்என் ரவி குற்றம்சாட்டியிருக்கும் நிலையில் தூத்துக்குடிக்கு போய் உங்களால் இப்படி பேச முடியுமா? என சவால் விட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து மாலை, இரவு நேரங்களில் கூடுதலாக விமானங்கள் இயக்கப்படும் என தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் மீன்பிடித் தொழிலாளர்களின் பங்குத் தொகையிலிருந்து கூடுதலாக கந்து வட்டி போல் பணம் வசூலிப்பதாக கூறி விசைப்படகு மீன்பிடி தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.