மெக்சிகோவில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவானது ரிக்டர் அளவுகோளில் சுமார் 7.2-ஆக பதிவாகியுள்ளது.
பசிபிக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஒயாசாகா நகருக்கு வடகிழக்கு திசையில் சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலும், பூமிக்கடியில் சுமார் 24 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தது, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
7.5 magnitude earthquake strikes southern Mexico- USGS.
— ANI (@ANI) February 17, 2018
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.