அமெரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை மிகபெரிய அளவிலான தொழில்நுட்ப செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் மற்றும் வெளியே உள்ள பயணிகள் செய்வதறியாமல் சிக்கித் தவிக்கின்றனர். அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) என்னும் விமான போக்குவரத்து கட்டுபாட்டு அமைப்பு அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, பாரிஸ் மற்றும் மாட்ரிட்டில் இருந்து பயணிகள் அமெரிக்காவுக்கான பயணங்களை ரத்து செய்வதாக புகார் தெரிவித்தனர். அமெரிக்க விமான நிலையங்களில் இருந்து புறப்படும் குறைந்தது 500 விமானங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் ஓடுபாதையில் மணிக்கணக்கில் சிக்கித் தவிப்பதாக சில பயணிகள் புகார் தெரிவித்தனர். நியூயார்க்கில் உள்ள ஜேஎஃப்கே விமான நிலையம், தம்பா, பிலடெல்பியா, இண்டியானாபோலிஸ், ஹொனலுலு, ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் மற்றும் ஜாக்சன்வில்லே ஆகியவை பாதிக்கப்பட்ட அமெரிக்க விமான நிலையங்களின் வளர்ந்து வரும் பட்டியலில் அடங்கும். சிக்கலை சரிசெய்ய முயற்சிப்பதாக FAA கூறியது.
1,200 க்கும் மேற்பட்ட விமானங்கள் இன்று அமெரிக்காவிற்குள், உள்ளே அல்லது வெளியே தாமதமாகியுள்ளன என்று விமான கண்காணிப்பு வலைத்தளம் FlightAware தெரிவித்துள்ளது. செயலிழப்பு மட்டுமே இதற்கான காரணியா என்பது உடனடியாகத் தெரியவில்லை. லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையம் அல்லது LAX, சிக்கலைத் தீர்க்க FAA செயல்பட்டு வருவதாகக் கூறியது, மேலும் பயணிகள் தங்கள் விமான நிலையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க | 54 பயணிகளை ‘அம்போ’ என விட்டுவிட்டு பறந்த விமானம்! பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி!
இன்று அதிகாலை விமான போக்குவரத்தை பாதிக்கும் வகையில் தொழில்நுட்ப சிக்கலை தீர்க்க FAA செயல்பட்டு வருகிறது. தயவுசெய்து உங்கள் விமான நிலையை சரிபார்க்கவும், FAA மூலம் எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை பகிர்ந்து கொள்வோம்" என்று லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம் ட்வீட் செய்துள்ளது.
இந்தச் சிக்கலைக் கருத்தில் கொண்டு NOTAM (விமானப் பணிக்கான அறிவிப்பு) சீர் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக FAA கூறியது. NOTAM அறிவிப்பு என்பது விமான போக்குவரத்து மற்றும் இயக்கத்திற்கான அத்தியாவசிய தகவல்களை விமான பணியாளர்களூக்கு வழங்கும் ஒரு அமைப்பாகும். ஏவுகணைகள் அல்லது பிற வான்வழி உபகரணங்களை சோதிக்கும் போதும் NOTAM அறிவிப்பு வழங்கப்படுவது வழக்கம்.
NOTAM என்பது விமான இயக்கம் தொடர்பான பணியாளர்களுக்கு அவசியமான தகவல்களைக் கொண்ட ஒரு அறிவிப்பு ஆகும். நீண்ட தூர சர்வதேச விமானங்களுக்கான இந்த அறிவிப்பு சுமார் 200 பக்கங்கள் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் ஓடுபாதை மூடல்கள், பொதுவான பறவை ஆபத்து எச்சரிக்கைகள் அல்லது குறைந்த உயர கட்டுமான தடைகள் போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியிருக்கும்.
மேலும் படிக்க | விமானத்தில் தொடரும் ‘சிறுநீர்’ பிரச்சனை! போதையில் பயணி நடத்திய அட்டூழியம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ