இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் இஸ்ரேலிய போர் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காசா நகரத்தின் ஒரு முக்கிய பகுதியில் பல கட்டிடங்கள், சாலைகள் மற்றும் ஊடக அலுவலகங்களை குறிவைத்து தாக்கின.
இஸ்ரேலிய (Israel) வான்வழித் தாக்குதலில் காசா பகுதியில், இருந்த அல்ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் மற்றும் பிற செய்தி ஊடகங்களின் அலுவலகங்கள் இருந்த மிகப்பெரிய கட்டிடம் தகர்க்கப்பட்டது. ஆனால், அலுவலகத்தில் இருந்த அனைத்து ஊடகவியலாளர்கள், ஊழியர்கள் மற்றும் பகுதி நேர பணியாளர்கள் பாதுகாப்பாக கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் (Joe Biden) இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu)தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இருப்பினும், ஹமாஸ் ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக காசாவில் நடந்த இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பிடென் தனது முழு ஆதரவையும் தெரிவித்தார், ஆனால் தாக்குதல்களில் பொதுமக்கள் பலியானது மற்றும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தார்.
ALSO READ | Jerusalem: மூன்று மதங்களின் புனித இடமாக திகழும் ஜெருசலத்தின் சுவாரஸ்ய வரலாறு
சனிக்கிழமையன்று நடைபெற்ற உரையாடலின் போது பிடென் இஸ்ரேலில் அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் மேற்குக் கரையில் அதிகரித்து வரும் பதற்றம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பிடென் மற்றும் நெதன்யாகு ஜெருசலேம் பற்றியும் விவாதித்தனர். அனைத்து மதத்தினரும் நல்லிணக்கத்துடன் நிம்மதியாக வாழும் இடமாக இருக்க வேண்டும் என்று பிடென் கூறினார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான பிரச்சனை முதல் உலகப் போர் காலத்தில் இருந்தே உள்ளது. இரண்டு நாடுகளுமே ஜெருசலேம் தான் எங்களின் தலைநகர் என்று உரிமை கொண்டாடி வருகிறது. ஏனெனில், ஜெருசலம் பகுதியை இரு நாடுகளுமே தங்களின் புனித பூமியாக பார்க்கிறது. ஜெருசலேம் மட்டுமின்றி காசா, மேற்கு கரை போன்ற பகுதிகளும் தங்களுக்கு தான் சொந்தம் என இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.
ALSO READ | Watch: இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் தகர்ந்த அல்ஜசீரா, பிற ஊடகங்களின் 12 மாடி கட்டிடம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR