French tycoon Bernard Arnault: டம்பர பிராண்டான லூயிஸ் உய்ட்டனின் தாய் நிறுவனமான LVMH நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பெர்னார்ட் அர்னால்ட்டின் பங்குகள், புதன்கிழமை வர்த்தகத்தில் 2.6 சதவீதம் சரிந்ததை அடுத்து டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் மீண்டும் உலகின் பணக்காரர் ஆனார். ப்ளூம்பெர்க்கின் பில்லியனர் குறியீட்டில் முதலிடத்தை பிடிக்கும் போட்டியில் இருவருக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியின் தற்போதைய நிகர மதிப்பு $192 பில்லியன் என்று ப்ளூம்பெர்க் கணித்துள்ளது, அர்னால்ட்டின் தற்போதைய சொத்து மதிப்பு $187 பில்லியன் என்பதால், அவர் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு சென்றுவிட்டார்..
74 வயதான பிரெஞ்சு வணிக அதிபரான அர்னால்ட், கடந்த ஆண்டு டிசம்பரில் முதன்முதலில் மஸ்க்கை முந்தினார், அந்த சமயத்தில் தொழில்நுட்பத் துறை சரிவைக் கண்டிருந்தது, பணவீக்கத்தினால் அப்போது மஸ்கிற்கு பின்னடைவு ஏற்பட்டது.
உலகின் மிகப்பெரிய கூட்டு நிறுவனங்களில் ஒன்றான LVMH ஐ நிறுவிய பெர்னார்ட் அர்னால்ட், மேலும் Loius Vuitton, Dior மற்றும் Hermes போன்ற ஆடம்பர பிராண்டுகளின் உரிமையாளார் அவ்ர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே, LVMH பங்குகள் சரிவடைந்து வருகின்றன.
மேலும் படிக்க | Axiom-2: விண்வெளிப் பயணத்தை வெற்றி! பூமிக்கு திரும்பிய ஆக்ஸியம்-2 குழுவினர்
ஒரு கட்டத்தில் அர்னால்ட் சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டாலர்கள் வரை சரிந்தது. ஆனால் எலான் மஸ்க் இந்த ஆண்டு 55.3 பில்லியன் டாலர்களை ஈட்டியிருக்கிறார். இதில் பெரும்பாலான வருவாய் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து கிடைத்தது என்பது டெஸ்லா உரிமையாளரின் சொத்து உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.
இப்போது, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மஸ்க் முதலிடத்தில் இருப்பதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ள நிலையில், ஃபோர்ப்ஸின் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 180 பில்லியன் டாலர் நிகரச் சொத்துக்களுடன் எலோன் மஸ்க் இரண்டாவது இடத்தில் இருக்கிறார், மேலும் ஆர்னால்ட் 211 டாலர் நிகர மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார். இரு நிறுவனங்களின் கணக்கீடுகளும் சில அம்சங்களில் மாறுபடுவது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் தனது வர்த்தகத்தை வலுப்படுத்தி விரிவுபடுத்தும் நோக்கத்தில் மஸ்க் சீனாவிற்கு, முன்னறிவிப்பின்றி சென்றுள்ள நிலையில், மஸ்க் உலக செல்வந்தர்களில் முதலிடம் பிடித்துள்ள செய்தி வந்துள்ளது.
மே, 20ம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) பெய்ஜிங் சென்ற எலோன் மஸ்க், கொரோனாவுக்குப் பிறகு (மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு) சீனாவுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
தங்கள் நாட்டுக்கு வந்த எலோன் மஸ்க்கை, சீன வெளிவிவகார அமைச்சர் சந்தித்தார் என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும் இருவருக்குமிடையிலான பேச்சுவார்த்தை குறித்து எந்தத் தகவலும் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கான சிறந்த சந்தை நோக்குநிலை வணிகம் மற்றும் சர்வதேச வணிகச் சூழலை உருவாக்குவதற்கு சீனா உறுதிபூண்டுள்ளது என்று, மஸ்க்கிடம் சீன அமைச்சர் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"டெஸ்லா சீனாவில் தனது வணிகத்தை தொடர்ந்து விரிவுபடுத்த தயாராக உள்ளது" என்று டெஸ்லா உரிமையாளர் மஸ்க் தெரிவித்துள்ளார். சீனாவின் மிகப்பெரிய பேட்டரி உற்பத்தியாளரான CAT இன் தலைவர், Zeng Yuqun, மஸ்க்கிற்கு இரவு விருந்து வழங்கினார்.
மஸ்கின் சீனப் பயணத்தின் முக்கியத்துவம்
எலோன் மஸ்க் தவிர, ஸ்டார்பக்ஸின் லக்ஷ்மன் நரசிம்மன் மற்றும் ஜேபி மோர்கனின் ஜேமி டிமோன் ஆகியோரும் இந்த வாரம் கம்யூனிஸ்ட் நாடான சீனாவிற்கு வருகை தருகின்றனர். மார்ச் மாதத்தில், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கும் வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாகன உற்பத்தி நிறுவனமான சீனாவில், தரவுக் கவலைகள் காரணமாக ஷாங்காய் ஆலையின் விரிவாக்கம் தொடர்பாக சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் மஸ்க் சீனாவிற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மோடி தலைமையிலான 9 ஆண்டு பாஜக ஆட்சிக்குக் மோர்கன் ஸ்டான்லியின் ’ரிப்போர்ட் கார்ட்’
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ