அமெரிக்க அதிபராக இருந்த போது டொனால்ட் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு, தனது ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் அழைத்து செல்ல விரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாமில் ஹனோய் நகரில் நடந்த ஒரு உச்சிமாநாட்டிற்குப் பிறகு ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் லிஃப்ட் கொடுக்க முன்வந்ததாக தகவல் கசிந்துள்ளது.
பல்வேறு பொருளாதார தடைகள் விதித்த போதிலும், சளைக்காமல், அணு ஆயுத சோதனைகள் மூலம் உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை (Kim Jong Un) முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு முறை சந்தித்து, அணு ஆயுதங்களை கைவிடும் படி வற்புறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2018ஆம் ஆண்டில் சிங்கப்பூரிலும், 2019 ஆண்டு வியட்நாமிலும் சந்தித்து பேசினார்.
வியட்நாமில் மாநாட்டில் கலந்து கொள்ள, அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ விமானமான Air Force One-ல் ட்ரம்ப் சென்றிருந்த நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீனா வழியாக சுமார் 60 மணி நேரம் ரயிலில் பயணம் செய்து வியட்நாமை அடைந்தார்.
கிம் ஜாங் உன் தனது தந்தை வழி நடக்கவே ரயிலில் பயணித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கிம் ஜாங் உன்னை தனது விமானத்தில் வட கொரியா அழைத்து செல்ல முன்வந்தது, அனைவரையும் திகைக்க வைத்தார்.
ஏனெனில், அமெரிக்க விமானம் வட கொரிய வான் எல்லையில் பறப்பது என்பது மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் கொண்ட விஷயமாகும். எனினும் டிரம்பின் இந்த உதவியை கிம் ஜாங் உன் ஏற்கவில்லை.
முன்னதாக சிங்கப்பூர் மாநாட்டிலும், அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), 1.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள காடிலாக் காருக்குள், கிம் ஜாங் உன்னை ஏற்றி சென்று, அதன் சிறப்பம்சங்களை விளக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த மாதம் அமெரிக்கா தனது நாட்டின் "மிகப்பெரிய எதிரி" என்று கூறிய கிம், யார் அதிபராக இருந்தாலும் வாஷிங்டனின் "வட கொரியாவுக்கு எதிரான கொள்கை ஒருபோதும் மாறாது" என்றும் கூறினார்.
கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்பை தோற்கடித்த ஜோ பைடனை - அமெரிக்க அதிபர் என்று வட கொரிய அதிகாரபூர்வ ஊடகங்கள் இன்னும் குறிப்பிடவில்லை.
ALSO READ | அமெரிக்கா தான் எங்கள் முதல் எதிரி.. மிரட்டுகிறார் Kim Jong Un..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR