இந்தோனேசியாவின் பாலி நகரில் உள்ள கோவிலுக்குள் ஜெர்மன் பெண் ஒருவர் திடீரென தனது ஆடைகளை கழற்றி வினோதமாக நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் போது ஏராளமானோர் அங்கு உடனிருந்தனர். பாலியில் உள்ள கோவிலில் நிர்வாணமாக, ஜெர்மன் பெண் விசித்திரமாக நடந்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அங்கு நீண்ட நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த பெண் தனது ஆடைகளை களைந்த பிறகு, கோவிலில் இருந்த ஊழியர்களுடன் சண்டையிட்டு, அங்கும் இங்கும் அலைந்தார். கோவில் நிர்வாகத்தினர் அவசர சேவை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பிறகு எப்படியோ அந்த பெண்ணை கட்டுப்படுத்தி, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
கைது செய்த போலீசார்
'சவுத் சைனா மார்னிங் போஸ்ட்' பத்திரிக்கையில் வெளியினா செய்தியில், 28 வயது ஜெர்மன் பெண்ணின் பெயர் தர்ஜா என்றும் அவர் தான் தங்கியிருந்த ஹோட்டல் கட்டணத்தைக் கூட கட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தோனேஷியா, சுற்றுலா பயணிகளை தவறாக நடத்துவதற்கு கடுமையான விதிகளை அமல்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோவிலில் திடீரென நிர்வாணமாக பரபரப்பை ஏற்படுத்திய அவள், ஏன் இப்படி செய்தாள் என்று அங்கிருந்தவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, பாலியில் உள்ள ஒரு கோவிலில் நிர்வாணமாக இருந்ததற்காகவும், புனித ஸ்தலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதற்காகவும் இந்த ஜெர்மன் சுற்றுலாப் பயணியை கைது செய்தனர்.
மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பெண்
போலீசாரின் விசாரணையில் அவர் மனநிலை சரியில்லாதவர் என்பதும் தெரிய வந்துள்ளது. அதன் பிறகு, இந்தோனேசிய அதிகாரிகள், வெளியுறவு அமைச்சகத்தின் நெறிமுறையைப் பின்பற்றி, அவரை மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தங்கியிருந்த விடுதியில் ஆடையின்றி சுற்றித் திரிந்ததாக போலீசார் தெரிவித்தனர். போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் என்பவர் இந்த சமப்வம் குறித்து கூறுகையில், ஜெர்மன் பெண் கோபமாகவும் சோகமாகவும் இருந்தார். இன்னும் கொஞ்ச நாள் இங்கேயே இருக்க வேண்டும் என்ற ஆசையில், நீண்ட நாள் தங்கியதில், வீட்டில் இருந்து கொண்டு வந்த பணம் எல்லாம் தீர்ந்து விட்டதாக சொன்னாள் என்றார்.
வைரலான நிர்வாண வீடியோ
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் கோவிலில் நடனமாடுபவர்களுக்கு அருகில் ஜெர்மன் பெண் நிர்வாணமாக காட்சியளிக்கிறார். முதலில் அப்படிப்பட்ட நிலையில் கோவிலுக்குள் செல்ல முயன்ற பாதுகாவலர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் செய்து சென்று அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க | ஆயிரக்கணக்கான மர்மமான உயிரினங்கள் கண்டுபிடிப்பு! ஆழ்கடல் அதிசயம்
கோவில் சுத்திகரிப்பு
இச்சம்பவத்தை அடுத்து, பூசாரிகள் கோவிலை சுத்தப்படுத்தினர். பாலியில் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வழக்குகள் சில காலமாக அதிகரித்து வருவதாக இந்தோனேஷியாவின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. குடிபோதையில் பிரச்சனையை ஏற்படுத்துதல் அல்லது மத ஸ்தலங்களின் கண்ணியத்தை பாதிக்கும் படி நடந்து கொள்ளுதல் அல்லது ஆபாசத்தைப் பரப்புதல் போன்ற குற்றச்சாட்டின் கீழ் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.
மேலும் படிக்க | அதிசயம்... ஆனால் உண்மை... முடமானவரை நடக்க வைத்து புது வாழ்வு அளித்த AI...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ