ரஷ்யா பர்ம் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி, பலருக்கு காயம்

ரஷ்யாவின் பெர்ம் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் கட்டிடம் ஒன்றில் திங்கள்கிழமை (செப்டம்பர் 20, 2021) 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 20, 2021, 05:47 PM IST

Trending Photos

ரஷ்யா பர்ம் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி, பலருக்கு காயம் title=

மாஸ்கோ: ரஷ்யாவின் பெர்ம் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் கட்டிடம் ஒன்றில் திங்கள்கிழமை (செப்டம்பர் 20, 2021) 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

"ரஷ்யாவின் பெர்ம் மாநில பல்கலைக்கழகத்தின் கட்டிடம் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி சூடு (Shooting) நடத்தினார். இதில் பலர் காயமடைந்துள்ளதாக முதன்மை அறிக்கைகள் தெரிவிக்கின்றன" என்று ரஷ்ய செய்தி நிறுவனம் டாஸ் தெரிவித்துள்ளது.

ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்பறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகத்தின் பத்திரிகை சேவை ஒன்று தெரிவித்ததாக டாஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கட்டிடத்திலிருந்து தப்பிக்க முதல் மாடியின் ஜன்னல்களிலிருந்து மாணவர்கள் குதிக்கும் காட்சிகளும், கீழே விழுந்து காயமடைந்த மாணவர்கள் பாதுகாப்பை நோக்கி ஓடும் காட்சிகளும் சமூக ஊடக தளங்களில் பரவி வருகின்றன.

ALSO READ: அமெரிக்காவில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் பலி!

எமக்கு வந்த தகவல்களின்படி, துப்பாக்கி சூடி நடத்தியவர் காவல் துறையினரால் (Police) சுட்டுக்கொல்லப்பட்டார். "பெர்ம் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  அவரிடம் ஆபத்தான ஆயுதம் இருந்ததாக கூறப்படுகிறது. 4 பேர் காயமடைந்ததாக பல்கலைக்கழகம் கூறியுள்ளது" என்று ரஷ்யாவின் ஆர்டி மூலம் 
 தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோவிற்கு (Moscow) கிழக்கே 1,300 கிலோமீட்டர் (800 மைல்) தொலைவில் உள்ள பெர்ம் மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டார் என பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் மற்றும் காவல்துறையினர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெரிய குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைக் கையாளும் நிறுவனமான ரஷ்யாவின் புலனாய்வுக் குழு,  துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பல்கலைக்கழக மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

ALSO READ: எல்லையை பயங்கரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதி இல்லை: ஆப்கானை எச்சரித்த ஈரான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News