Nepal Plane Crash Rescue Updates: பணியாளர்கள் உட்பட 72 பேர் பயணித்த எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம், 10 முதல் 20 விநாடிகளில் தரையிறங்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளான காரணம் என்ன என்ற விசாரணை அனைவருக்கும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஏடிஆர் 72 இரட்டை எஞ்சின் டர்போபிராப் விமானம் விபத்துக்குள்ளான காரணம் என்ன? 68 பேர் உயிரிழந்துள்ளதை நேபாள அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
விபத்து குறித்து விசாரணை நடத்த நேபாள அரசு ஐந்து பேர் கொண்ட ஆணையத்தை அமைத்துள்ளது. விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், போக்கராவில் விழுந்து நொறுங்கிய எட்டி ஏர்லைன்ஸ் விமானம், ஓடுதளத்தில் இருந்து 24.5 கிமீ தூரமே இருந்த நிலையில் தரையிறங்கும் தளத்தை மாற்றியது என தெரிவித்தனர்.
கேப்டன் கமல் கேசிக்கு, விமானத்தைத் தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது என்றும், இறுதியில் 20 விநாடிகளுக்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் தெரியவந்துள்ளது. தரையிறங்க அனுமதி கொடுக்கும்போது, விமானத்தில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்பதோடு, அனைத்தும் சரியாகவே இருந்திருக்கிறது.
ஆனால், தரையிறங்க அனுமதி கொடுக்கப்பட்ட பிறகுக், விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த விமானி, “நான் எனது முடிவை மாற்றிக் கொள்கிறேன்,” என விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிடம் தெரிவித்துள்ளார்.
ஓடுபாதை 30இல் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விமானியோ ஓடுபாதை 12இல் தரையிறங்க அனுமதி கோரினார் என்றும், அதற்கான காரணம் தெரியவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | Nepal Plane Crash: நோபாள விமான விபத்து - 72 பேர் நிலை என்ன?
தரையிறங்குவதற்கான அனுமதி கிடைத்ததும், விமானம் கட்டுப்பாட்டு கோபுரத்திலிருந்து பார்க்கக்கூடிய தொலைவுக்கு நெருங்கி வந்துவிட்டது. இதன் அடிப்படையில் 10 முதல் 20 விநாடிகளில் தரையிறங்கும் என்று விமான போக்குவரத்து கட்டுப்பாடு அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
வானத்தில் புலப்பாடு தெளிவாக இருந்தன மற்றும் எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் இருந்தது. லேசான காற்று இருந்த போதிலும், "வானிலையில் எந்த பிரச்சனையும் இல்லை" என்பதால், நேற்று (2023, ஜனவரி 15 ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட விபத்து அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கிறது.
மேலும் படிக்க | பெண்ணுரிமைக்கு முன்னுரிமை இல்லை: தாலிபான் திட்டவட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ