Earthquake In China - Tajikistan Border: சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியிலும், தஜிகிஸ்தான் எல்லை பகுதியிலும் இன்று (பிப். 23) காலை 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
தஜிகிஸ்தானில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டதாக சீனா பூகம்ப வலையமைப்பு மையம் (CNC) தெரிவித்துள்ளது. இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | அமெரிக்க எம்பயர் கட்டடத்தின் பரம ரகசியம்...! நாணயம் உயிரை கொல்லுமா?
இந்த நிலநடுக்கம் சீனாவின் அருகில் உள்ள எல்லையில் இருந்து சுமார் 82 கி.மீ., தொலைவில் மையம் கொண்டது. ஜின்ஜியாங் பிராந்தியத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கஷ்கர் மற்றும் ஆர்டக்ஸ் ஆகிய இடங்களில் வலுவாக உணரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#UPDATE A magnitude-7.2 earthquake jolted Tajikistan at a depth of 10 kilometers on Thursday, according to the China Earthquake Networks Center (CENC).
There have been no reports of casualties or damages. https://t.co/btuwLDUBBK https://t.co/M620eSTq7Y
— CGTN (@CGTNOfficial) February 23, 2023
அதேபோன்று, கிழக்கு தஜிகிஸ்தானில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 20.5 கிமீ ஆழத்தில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 5:37 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மையப்பகுதி ஆப்கானிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லையில் உள்ள அரை-தன்னாட்சி கிழக்குப் பகுதியான கோர்னோ-படக்ஷானில் ஏற்பட்டதாக தெரிகிறது.
ஆரம்ப நிலநடுக்கத்திற்குப் பிறகு சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு 5.0 ரிக்டர் அளவிலான பிந்தைய நிலநடுக்கம் ஏற்பட்டது. குறைந்த மக்கள்தொகை கொண்ட பிரதேசம் உயர்ந்த பாமிர் மலைகளால் சூழப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஆச்சர்ய தகவல்! பாகிஸ்தானில் உள்ள சில ‘இந்து’ அதிர்ஷ்டசாலிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ