வழக்கமான போர் நடந்ததால் நாங்கள் தோற்றுவிடுவோம்: இம்ரான்கான்

இந்தியாவுடன் வழக்கமான முறையில் போர் நடந்ததால் பாகிஸ்தான் தோற்றுப் போக நேரிடும் என பிரதமர் இம்ரான் கான்தெரிவித்துள்ளார்!!

Last Updated : Sep 15, 2019, 04:33 PM IST
வழக்கமான போர் நடந்ததால் நாங்கள் தோற்றுவிடுவோம்: இம்ரான்கான் title=

இந்தியாவுடன் வழக்கமான முறையில் போர் நடந்ததால் பாகிஸ்தான் தோற்றுப் போக நேரிடும் என பிரதமர் இம்ரான் கான்தெரிவித்துள்ளார்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யது, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மத்திய அரசு. அந்த மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. 

இந்நிலையில், இந்தியாவுடன் வழக்கமான முறையில் போர் நடந்ததால் பாகிஸ்தான் தோற்றுப் போக நேரிடும் என்று கூறியுள்ள அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இம்ரான் கான் கூறுகையில்; பாகிஸ்தான் ஒரு போதும் அணு ஆயுதப் போரை தொடங்காது என்று தெரிவித்தார். அதேசமயம், பீரங்கிகள், துப்பாக்கிகளைக் கொண்டு வழக்கமான முறையில் இந்தியாவுடன் போர் நடைபெறும் பட்சத்தில் பாகிஸ்தான் தோற்க நேரிடும் என்றும் அவர் கூறினார். எனவே, அணு ஆயுதங்கள் வைத்துள்ள இரு நாடுகள் மோதிக் கொள்வது, அணு ஆயுத போருக்குத் தான் வழிவகுக்கும் என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

சரண் அடைய வேண்டும் அல்லது சாகும் வரை போரிட வேண்டும் என்ற இரு வாய்ப்புகளுக்கு இடையில் சிக்கிக் கொள்ள நேர்ந்தால், சாகும் வரை போரிட வேண்டும் என்ற வாய்ப்பையே பாகிஸ்தான் தேர்வு செய்யும் என்று இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார். அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரு நாடு, சாகும் வரை போரிட நேர்ந்தால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இருப்பினும் தாம் போருக்கு எதிரானவன் என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

 

Trending News