தேவைப்பட்டால் மீண்டும் இஸ்ரேலை தாக்குவோம். ஈரானின் உச்ச தலைவர் கமேனி எச்சரிக்கை

Iran-Israel Latest News: ஒவ்வொரு நாடும் தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. இஸ்ரேலுக்கு ஈரான் தக்க பதிலடி கொடுத்துள்ளது -அயதுல்லா அலி கமேனி

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 4, 2024, 03:34 PM IST
தேவைப்பட்டால் மீண்டும் இஸ்ரேலை தாக்குவோம். ஈரானின் உச்ச தலைவர் கமேனி எச்சரிக்கை title=

Ayatollah Ali Khamenei: ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி முதல் முறையாக ஒரு பொதுக் கூட்டத்திற்கு வந்துள்ளார். ஹஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட பின்னர், இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இன்றைய (வெள்ளிக்கிழமை) தொழுகைக்கு தலைமை தாங்கினார். 

அயதுல்லா அலி கமேனி உரையின் முக்கியம்சங்கள்

அப்பொழுது பேசுகையில், "உலக முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். எதிரிகளின் திட்டங்கள் தோற்கடிக்கப்படும் என்று கூறினார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து ஏமன் வரை, ஈரானில் இருந்து காசா மற்றும் லெபனான் வரை முஸ்லிம் நாடுகள் தங்கள் பாதுகாப்பிற்கு தயாராக வேண்டும் என்று கமேனி வலியுறுத்தினார்.

ஈரான் ஹெஸ்புல்லாவுடன் உள்ளது. இஸ்ரேலுக்கு ஈரான் தக்க பதிலடி கொடுத்துள்ளது. இஸ்ரேல் தாக்கினால் ஈரானும் பின்வாங்காது.

இஸ்ரேலுக்கு பதிலளிப்பதில் நாங்கள் தாமதிக்க மாட்டோம் அல்லது அவசரப்பட மாட்டோம் என்று கமேனி கூறினார். 

ஒவ்வொரு நாடும் தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. அப்பாவி பொதுமக்களை கொன்று வெற்றி பெற்றதாக இஸ்ரேல் பாசாங்கு செய்கிறது. 

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை கமேனி தனது உரையில் நியாயப்படுத்தினார்.

லெபனான், ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக நிற்கவும், தீய ஆட்சியை (இஸ்ரேல்) எதிர்கொள்வதில் அவர்களுக்கு உதவ வேண்டும்.

நாங்கள் சோகமாக இருக்கிறோம். ஆனால் தோற்கடிக்கப்படவில்லை.

அரபு முஸ்லிம்கள் தமக்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். 

இஸ்லாமியர்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் செல்ல வேண்டும் என்றார். 

நாங்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்க்கிறோம், தொடர்ந்து செய்வோம். 

இஸ்ரேலுக்கு எதிரான ஆயுதப் படைகளின் அற்புதமான நடவடிக்கை நியாயமானது மற்றும் முற்றிலும் சட்டப்பூர்வமானது

தேவைப்பட்டால் மீண்டும் இஸ்ரேலை தாக்குவோம். 

இவ்வாறு தனது உரையில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பேசினார். 

மேலும் படிக்க - 'பலியானார் ஹிஸ்புல்லா தலைவர்' அறிவித்த இஸ்ரேல் - யார் இந்த ஹசன் நஸ்ரல்லாஹ்?

மேலும் படிக்க - லெபனானுக்கு கொடூரமான நாள்... 182 பேர் பலி; தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல் - சூழும் போர் மேகங்கள்

மேலும் படிக்க - இப்ராஹிம் ரைசி யார்? அவரின் கொள்கைகள் என்ன? விபத்து சதியா? -முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News