உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகே பல இடங்களில் காட்டுத் தீ பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செர்னோபில் அணு உலைக்கு அருகே காட்டுத் தீ பரவியுள்ளதாக உக்ரைனின் அதிகாரப்பூர்வ அறிக்கையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
செர்னோபில் அணு உலை அருகே காட்டுத் தீ
ரஷ்யா-உக்ரைன் இடையே அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், செர்னோபில் அணு உலைக்கு அருகே காட்டுத் தீ வெடித்துள்ளதாக உக்ரைன் ஊடகங்கள் அதிகாரப்பூர்வ அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
செயற்கைக்கோள் படங்கள்
இது குறித்து உக்ரைன் நாடாளுமன்றம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளதது. அறிக்கைகளின்படி, செர்னோபிலின் விலக்கு மண்டலத்திற்குள் குறைந்தது ஏழு தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
உக்ரைன் நாடாளுமன்ற அறிக்கையின்படி, செயற்கைக்கோள் படங்கள் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால் வழங்கப்பட்டவை.
அந்த அறிக்கையின்படி "அநேகமாக ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பால் தீ ஏற்பட்டது, அதாவது ஷெல் தாக்குதல் அல்லது தீ வைப்பு காரணங்களால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம். அதே காரணங்களுக்காக மற்றும் இராணுவச் சட்டத்தின் கணக்கில் எடுத்துக்கொள்வதால், ASKRS புள்ளிகள் தங்கள் செயல்பாடுகளை முழுமையாக செய்ய முடியாது"
Suomi NPP VIIRS caught two small fires over the night (~ 1:22 am) near the Chornobyl Radiation and Ecological Biosphere Reserve. @NASAEarth Worldview will update MODIS and VIIRS (Suomi NPP + NOAA-20) throughout the day. https://t.co/CUnDKcVUxY pic.twitter.com/gd60XfUUYj
— Jessica McCarty (@jmccarty_geo) March 22, 2022
"அவசரநிலைகளின் வகைப்பாட்டின் படி, விலக்கு மண்டலத்தில் ஏற்பட்ட தீயின் அளவுகோல்கள் 0.05-0.2 சதுர கிலோமீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும், ஆனால் தீயின் பகுதியின் தற்போதைய நிலை இந்த குறிகாட்டிகளை விட பத்து மடங்கு அதிகமாகும்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ரஷ்யா அணு ஆயுத போரை நோக்கி செல்கிறதா?
காட்டுத் தீ ஆபத்தை ஏற்படுத்துகிறது
செர்னோபில் ஆலையைச் சுற்றியுள்ள கைவிடப்பட்ட மண்டலத்தில் வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் காட்டுத்தீ ஏற்படுவது இயல்பானது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானது.
1986 விபத்துக்குப் பிறகு கதிர்வீச்சு அளவுகள் கணிசமான அளவு குறைவாக இருந்தாலும்,அதன் தாக்கத்தால் இன்னும் ஆபத்துகள் ஏற்படுவதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
தீயின் மூலம் தெரியவில்லை
உக்ரைன் நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ள உக்ரைன் செய்தி நிறுவனமான உக்ரைன்ஸ்கா பிராவ்தா, பீரங்கி குண்டுத்தாக்குதல் அல்லது தீ வைப்புத் தாக்குதல்கள் காரணமாக தீ விபத்துகள் ஏற்பட்டிருக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அறிக்கையை சுயாதீனமாக உறுதிப்படுத்த எந்த வழியும் இல்லை.
மேலும் படிக்க | அணு ஆயுதத்தை பயன்படுத்த விரும்பவில்லை... ஆனால்... எச்சரிக்கை விடுக்கும் ரஷ்யா
ரஷ்யப் படைகள் செர்னோபில் வளாகத்தைக் கைப்பற்றின
பிப்ரவரி 24 அன்று, ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த நாளில், வரலாற்றில் மிக மோசமான அணு உலை பேரழிவைத் தூண்டிய செர்னோபில் வளாகத்தை மாஸ்கோவின் துருப்புக்கள் கைப்பற்றின.
ரஷ்ய வீரர்கள் செர்னோபிலை ஏன் கைப்பற்றினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, அங்கு அழிக்கப்பட்ட உலை ஒரு கான்கிரீட் மற்றும் முக்கியமான சில பகுதிகள் நுணுக்கமான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. மற்ற மூன்று உலைகளும் செயலிழக்கப்படுகின்றன.
2017 ஆம் ஆண்டில், ரஷ்யாவில் தோன்றியதாகக் கருதப்படும் மாபெரும் சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இலக்குகளில், இந்தத் தளமும் ஒன்றாகும், இதனால், சொர்னோபில் கதிர்வீச்சு கண்காணிப்பு அமைப்பு ஆஃப்லைனுக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ரஷ்ய தாக்குதலில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தீ
செர்னோபில் ஊழியர்கள்
இறுதியாக 1986 அணுஉலை உருகிய இடத்தில் செர்னோபில் அணுமின் நிலையத்தில் உக்ரேனிய ஊழியர்கள் இருந்தனர். ஆனால் ரஷ்ய படையெடுப்பினால், அணுமின் நிலையம் கையகப்படுத்தப்பட்ட பின்னர், செர்னோபில் ஊழியர்களுக்கு முதல் முறையாக விடுப்பு அளிக்கப்பட்டது.
ஊழியர்களில் பாதி பேர் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிவிட்டதாக உக்ரைன் கூறுகிறது.
(பொறுப்புத் துறப்பு: உக்ரைன்-ரஷ்யா மோதலில் பல உரிமைகோரல்கள் மற்றும் எதிர் உரிமைகோரல்கள் செய்யப்படுகின்றன. இந்தச் செய்திகளின் உண்மைத்தன்மையை ஜீ நியூஸ் நேரடியாக சரிபார்க்க பல முயற்சிகளை எடுத்துள்ளது. இருந்தபோதிலும் ஊடகங்களில் வெளியாகும் அறிக்கைகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் நம்பகத்தன்மையை எங்களால் முழுமையாக சுயாதீனமாகச் சரிபார்க்க முடியாது)
மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR