ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே ராஜினாமா செய்ய உள்ளதாக ஜப்பான் ஊடகம் NHK வெள்ளிக்கிழமை தெரிவித்தது. தனது உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அரசுக்கு அதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க விரும்புவதாக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் சிறிது காலமாக, பெருங்குடல் தொடர்பான நோயுடன் போராடுவதாக கூறப்படுகிறது.
ஜப்பான் பிரதமர் ஹின்சோ அபே பதவி விலகினால், அடுத்த பிரதமர் யார் என்ற ஊகங்களும் எழுந்துள்ளன.
தாரோ அசோ (TARO ASO)
துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் இருக்கும் தாரோ அசோ, 79, அபேயின் நிர்வாகத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து வருகிறார். அபேக்குப் பின் யார் வரவேண்டும் என்பதில் தெளிவான ஒருமித்த கருத்து இல்லாமல் இருந்தால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அபே ராஜினாமா செய்த பிறகு, அசோவை ஒரு தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கலாம்.
மேலும் படிக்க | மொதல்ல சொன்னதை செய்யுங்க... இந்தியா சீனாவுக்கு எச்சரிக்கை..!!!
ஷிகெரு இஷிபா (SHIGERU ISHIBA)
முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், அபேயை அரிதாக விமர்சனம் செய்யும் 63 வயதான இஷிபா அடுத்த பிரதமராக ஆகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் கட்சியின் உறுப்பினர்களிடையே அவர் அவ்வளவு பிரபலமில்லை.
ஃபுமியோ கிஷிடா (FUMIO KISHIDA)
63 வயதான கிஷிடா 2012 முதல் 2017 வரை அபே அரசில் வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார், ஆனால் இராஜிய துறை முக்கியமாக பிரதமரின் வசம் தான் இருந்தது.
மேலும் படிக்க | Kim Jong Un: என்ன தான் நடக்கிறது மர்ம தேசமான வடகொரியாவில்..!!!
தாரோ கோனோ (TARO KONO)
பாதுகாப்பு அமைச்சர் டாரோ கோனோ, வயது 56,
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் படித்தவர் மற்றும் சரளமாக ஆங்கிலம் பேசுபவர். முன்பு வெளியுறவு அமைச்சர் மற்றும் நிர்வாக சீர்திருத்த அமைச்சராக பணியாற்றினார்.
யோஷிஹைட் சுகா (YOSHIHIDE SUGA)
2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் அபே பிரதமராக பதவியேற்றதிலிருந்து, அபேக்கு விசுவாசமாக இருந்து வரும் சுகா தன்னுடைய கடும் உழைப்பால் இந்த நிலைக்கு வந்தவர். இவருக்கு வயது 71, 2012 இல் அபேவை மீண்டும் முதல் பதவிக்கு போட்டியிட ஊக்குவித்த கூட்டணி கட்சிகளில் இவரும் ஒருவர்.
ஷின்ஜிரோ கொய்சுமி (SHINJIRO KOIZUMI)
இப்போது சுற்றுச்சூழல் அமைச்சரும், புகழ் பெற்ற முன்னாள் பிரதமர் ஜூனிச்சிரோ கொய்சுமியின் மகனுமான கொய்சுமியின் பெயரும் அடிபடுகிறது. இவருக்கு வயது 39. எதிர்கால பிரதமராக கருதப்பட்டாலும், பலர் அவரை மிகவும் மிக இளையவர் என கருதுகின்றனர்.
கட்சுனோபு கட்டோ, யசுடோஷி நிஷிமுரா (KATSUNOBU KATO, YASUTOSHI NISHIMURA)
சுகாதார அமைச்சரான, 64 வயதான கட்டோ, ஜப்பானின் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதிலிருந்து மக்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார். ஆனால் பொருளாதார அமைச்சரும், முன்னாள் வர்த்த அதிக்காரியும் ஆன யசுதோஷி நிஷிமுரா இன்னும் அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறார். இவருக்கு வயது 57.
சீகோ நோடா (SEIKO NODA)
59 வயதான நோடா, ஜப்பானின் முதல் பெண் பிரதமராக வேண்டும் என்ற விரும்புவது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஒரு அபே விமர்சகர், முன்னாள் உள்நாட்டு விவகார அமைச்சரும், பெண்கள் நலனுக்கன அமைச்சரும் ஆக இருந்தார். வைத்திருந்தார். 2018 இல் கட்சித் தலைவருக்கான போட்டியில் இருந்தார்.