ஜோ பைடன் அணியில் இந்திய-அமெரிக்கர் மாலா அடிகாவிற்கு முக்கிய பதவி..!!!

ஜில் பிடனின் மூத்த ஆலோசகராக பணியாற்றிய மாலா அடிகா, ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோரின் தேர்தல் பிரச்சாரத்தில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 21, 2020, 06:21 PM IST
  • ஜில் பிடனின் மூத்த ஆலோசகராக பணியாற்றிய மாலா அடிகா, ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோரின் தேர்தல் பிரச்சாரத்தில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • 2008 இல் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் பிரச்சாரத்தில் சேருவதற்கு முன்பு, அவர் சிகாகோ சட்ட நிறுவனத்தில் பணியாற்றினார்.
  • ஒபாமா நிர்வாகத்தில், மாலா அசோசியேட் அட்டர்னி ஜெனரலாகவும் இருந்துள்ளார்.
ஜோ பைடன் அணியில் இந்திய-அமெரிக்கர் மாலா அடிகாவிற்கு முக்கிய பதவி..!!! title=

நியூயார்க்: ஜனவரி மாதம் அமெரிக்காவின் (America) ஜனாதிபதியாக பதவியேற்கும் ஜோ பிடனின்  (Joe Biden) மனைவி ஜில் பிடனுக்கு (Jill Biden)  ஒரு இந்திய-அமெரிக்க மாலா அடிகா வெள்ளிக்கிழமை கொள்கை இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு, மாலா அடிகா வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகளுக்கு துணை உதவி செயலாளராக இருந்துள்ளார்.

ஜில் பிடனுக்கு பிஹெச்டி இருப்பதால் மாலா அடிகாவின் நியமனம் முக்கியமானது. அவர் வெள்ளை மாளிகைக்குச் (White House ) சென்ற பிறகும் கல்லூரி ஆங்கில பேராசிரியராக தொடர்ந்து பணியாற்றுவார். ஜில் பிடன் கொள்கை தொடர்பான விஷயஙக்ளில் தீவிரமாக பணியாற்றுவார் என்பதோடு,  முக்கியமான பல விஷயங்களில் அவரது கணவர் ஜோ பிடனுடன் (Joe Biden)  நெருக்கமாக பணியாற்றுகிறார்.

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சாரத்தில் ஜில் பிடனின் மூத்த ஆலோசகராக மாலா அடிகா பணியாற்றியுள்ளார். கமலா ஹாரிஸ் ( kamala Harris) துணைத் அதிபர் பதவியை வகிப்பார். இவரது தாய் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

மாலா அடிகா பிடன் அறக்கட்டளையில் உயர் கல்வி மற்றும் இராணுவ குடும்பங்களின் இயக்குநராக இருந்துள்ளார். அவர் தொழில் ரீதியாக, ஒரு வழக்கறிஞராக இருந்து வருகிறார். 2008 இல் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் பிரச்சாரத்தில் சேருவதற்கு முன்பு, அவர் சிகாகோ சட்ட நிறுவனத்தில் பணியாற்றினார்.  ஒபாமா நிர்வாகத்தில், மாலா அசோசியேட் அட்டர்னி ஜெனரலாகவும் இருந்துள்ளார்.

ALSO READ | 60 ஆண்டுகளுக்கு பிறகு திபெத் அமைப்பை வரவேற்ற அமெரிக்கா  ... அதிர்ச்சியில் சீனா..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News