பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடை விதித்துள்ளது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வியாழக்கிழமை அறிவித்தது. கடந்த 20.07.2023 - அன்று பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்வதை இந்திய அரசு உடனடியாக தடை செய்துள்ளது.பருவகால மழை தாமதமாகத் தொடங்கிய பின்னர், பயிர் பாதிக்கப்பட்டு உற்பத்தி பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு என கூறப்படுகிறது.
இந்த ஏற்றுமதி தடையால் அரிசியின் விலை உலக அளவில் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அரிசி வர்த்தகர்கள் இதன் மூலம் அதிக லாபம் பெறுவார்கள் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் 300 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி தான் முக்கிய உணவாகும். 90% அரிசி உற்பத்தி ஆசியாவில் தான் நடக்கிறது. மேலும் உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் 40% இந்தியா பங்கு வகிக்கிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் முண்டியடித்து சூப்பர் மார்கெட்டில் குவிந்து விட்டனர், அரிசி ஏற்றுமதி தடை காரணமாக, விலை உயர்ந்து விடும் என்ற அச்சம் காரணமாகவும், கிடைக்காமல் போய் விடுமோ என்ற சந்தேகம் காரணமாகவும், இந்தியர்கள் அர்சி வாங்க சூப்பர் மார்க்கெட்டில் லைனில் நிற்கின்றனர். இதனால் பல கடைகளில் ஒரு வாடிக்கையாளருக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே அரிசி கொடுக்கப்படும் என அறிவிப்பு வைக்கப்படும் நிலை உருவாகியது.
இந்த வருடம் 2023 இல் இரண்டு வித ஆபத்து - மழையினால் - முதலில் 2023ல் பருவமழை பொய்த்துப் போனதால், நெல் சாகுபடி பரப்பு ஓரளவு குறையும் என்று தொழில்துறை அதிகாரிகள் அஞ்சுகின்றனர். பருவமழை தாமதமாக வந்ததால் ஜூன் நடுப்பகுதி வரை பெரிய அளவில் மழைப் பற்றாக்குறை ஏற்பட்டது. ஜூன் கடைசி வாரத்தில் இருந்து பெய்த கனமழை பற்றாக்குறையை துடைத்தாலும், அவை பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
உலக அரிசி ஏற்றுமதியில் 40%க்கும் அதிகமான பங்கை இந்தியா கொண்டுள்ளது, இது 2022 இல் 55.4 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்தது. இந்தியா 2022 இல் 17.86 மில்லியன் டன் பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது, இதில் 10.3 மில்லியன் டன் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியும் அடங்கும். இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 2022 ஆம் ஆண்டில் சாதனை அளவாக 22.2 மில்லியன் டன்களை எட்டியது. இது உலகின் அடுத்த நான்கு முக்கிய தானிய ஏற்றுமதியாளர்களின் ஏற்றுமதியை விட அதிகம். - அதாவது தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் செய்யும் மொத்த ஏற்றுமதி அளவையும் தாண்டியது.
முன்னதாக, நியூஸ் ஏஜென்சியான ப்ளூம்பெர்க், பெரும்பாலான அரிசி வகைகளின் ஏற்றுமதியை தடை செய்வது குறித்து இந்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தது. இந்த தடையானது இந்தியாவின் அரிசி ஏற்றுமதியில் 80 சதவீதத்தை பாதிக்கலாம், இந்தியாவில் அரிசி விலையை குறைக்கலாம் ஆனால் உலகளாவிய விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
உக்ரைன் போருக்கு பிறகு - பல நாடுகள் நம்மிடம் வாங்கி அதிக விலைக்கு விற்க ஆரம்பித்த பின பல உணவு பொருள் ஏற்றுமதி கட்டுபாடுகள் கொண்டுவந்தனர். கடந்த செப்டம்பர் 2022 இல், உடைந்த அரிசி ஏற்றுமதியை இந்தியா தடை செய்தது மற்றும் பல்வேறு தர அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதித்தது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெரும்பாலான அரிசி வகைகளின் ஏற்றுமதியைத் தடை செய்வது குறித்து நாடு பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்திய அரிசி ஏற்றுமதி விலைகள் ஏழாவது வாரமாக உயர்ந்து, கடந்த வாரம் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரத்து குறைந்து போனது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ