ரஷ்யா உக்ரைன் இடையிலான பதட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியர்கள் உட்பட உக்ரைனில் சிக்கியிருக்கும் அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். பல்வேறு அரசாங்கங்களும் தங்கள் நாட்டு மக்களை அழைத்து வர அனைத்து வித ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன.
இதற்கிடையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் பாகிஸ்தான் மற்றும் துருக்கி மாணவர்களுக்கும் போரால் ஸ்தம்பித்துள்ள உக்ரைனிலிருந்து தப்பிக்க இந்திய தேசியக்கொடி உதவியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் ஒரு இந்திய மாணவர் தெரிவித்தார்.
உக்ரைனில் இருந்து ருமேனியாவின் புக்கரெஸ்ட் நகருக்கு வந்த இந்திய மாணவர்கள், இந்தியக் கொடி தங்களுக்கு உதவியதாகவும், சில பாகிஸ்தான் மற்றும் துருக்கிய மாணவர்களும் பல்வேறு சோதனைச் சாவடிகளை பாதுகாப்பாகக் கடக்க இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தியதாகவும் கூறினர்.
"இந்திய கொடியை துருக்கிய மற்றும் பாகிஸ்தான் மாணவர்களும் பயன்படுத்துகின்றனர். ஒரு மாணவர், இந்தியக் கொடி அவர்களுக்கும் மிகப்பெரிய உதவியை செய்ததாக கூறினார்” என இந்திய மாணவர் ஒருவர் தெரிவித்தார்.
#WATCH | "We were easily given clearance due to the Indian flag; made the flag using a curtain & colour spray...Both Indian flag & Indians were of great help to the Pakistani, Turkish students," said Indians students after their arrival in Bucharest, Romania#UkraineCrisis pic.twitter.com/vag59CcPVf
— ANI (@ANI) March 2, 2022
உக்ரைனின் ஒடேசாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் கூறுகையில், "உக்ரைனில், இந்தியக் கொடியை எங்களுடன் எடுத்துச் சென்றால், எங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது." என்றார்.
மத்திய அமைச்சர், ஜி. கிஷன் ரெட்டி, உக்ரைனின் நெருக்கடியான சூழலில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை பாதுகாப்பாக அங்கிருந்து ஆழைத்து வருவதை உறுதி செய்வதற்காக வாகனங்களில் தேசியக் கொடியை பறக்கவிட பரிந்துரை செய்தார்.
மேலும் படிக்க | உக்ரைனுக்கு எதிராக மனித உடலை ஆவியாக்கும் vacuum bomb-ஐ பயன்படுத்தியதா ரஷ்யா?
சந்தையிலிருந்து ஸ்ப்ரே பெயிண்ட்களை வாங்கி, தாங்களாகவே இந்தியக் கொடியை உருவாக்கியது பற்றியும் மாணவர்கள் விளக்கினார்கள்.
"நான் ஒரு கடைக்குள் சென்று சில வண்ணத் ஸ்ப்ரேக்கள் மற்றும் திரைச்சீலை வாங்கினேன். அதன் பிறகு, நான் அந்த திரைச்சீலையை வெட்டி, அதன் மீது இந்திய மூவர்ணக் கொடிக்கான வண்ணங்களை பூசினேன்” என மாணவர் ஒருவர் விளக்கினார்.
இந்திய தூதரகம் ஏற்கனவே தேவையான ஏற்பாடுகளை செய்திருந்ததால் மோலோடோவாவில் மாணவர்களுக்கு அதிக சிரமம் ஏற்படவில்லை.
மாணவர்கள் இந்தியாவுக்குத் திரும்பும் விமானங்களுக்காகக் காத்திருந்த போது, அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்குமிடங்களை வழங்கியதற்காக இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும் படிக்க | ரஷிய தாக்குதலில் இந்திய மாணவர் உயிர் இழந்தது எப்படி...? முழு விவரம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR